Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், மனோஜிடம் இருந்து 30 லட்சம் ரூபாயை ஆட்டைய போட்ட கதிரை கண்டுபிடிப்பதற்கு மீனா மற்றும் முத்து ஒரு பிளான் பண்ணி புது ட்ராக்கில் போய்க்கொண்டு இருக்கிறார்கள். இதை தெரிந்து கொண்ட மனோஜ், சீக்கிரம் அவர்களை கண்டுபிடித்து என்னுடைய பணத்தை கண்டுபிடித்து கொடு என்று கொஞ்சம் தெனாவட்டாக சொல்கிறார்.
உடனே முத்து, இவன் போய் ஏமாறுவதும் அவரை கண்டுபிடிப்பதும் தான் எனக்கு வேலை. உன்னால மீனா, பூ கட்டற வேலையை விட்டுவிட்டு CID வேலையை பார்க்கிறார். நானும் கார் ஓட்டுவதை நிப்பாட்டிட்டு அந்த கதிரே கண்டுபிடிக்க முயற்சி எடுக்கிறேன். ஆனால் அப்பொழுது கூட மனசாட்சி இல்லாமல் எவ்வளவு தெனாவட்டாக என் பணத்தை சீக்கிரம் கண்டுபிடித்து கொடு என்று சொல்கிறாய்.
நீ பண்ணியதுக்கெல்லாம் நாங்கள் இதில் தலையிடவே கூடாது. ஆனால் அப்பா சொல்லிட்டாங்க என்பதற்காக அவருக்காக தான் நானும் மீனாவும் அந்த கதிரை கண்டுபிடிப்பதற்கு முயற்சியில் இறங்கி இருக்கிறோம் என்று முத்து, மனோஜை பார்த்து நல்ல நாலு கேள்வி கேட்டு விட்டார். பிறகு விஜயா, மீனாவை சமைக்க சொல்கிறார். அதற்கு மீனா நானும் அவரும் வெளியிலேயே சாப்பிட்டு வந்து விட்டோம், வரும்போது உங்களுக்கும் சாப்பாடு வாங்கிட்டு வந்தோம் என்று சொல்கிறார்.
உடனே மனோஜ் அப்படி என்றால் எங்க ரெண்டு பேருக்கும் சாப்பாடு இல்லையா என்று கேட்கிறார். அதற்கு முத்து, உன் பொண்டாட்டியை சமைத்து தர சொல்லி நீ சாப்பிடு என்று சொல்கிறார். உங்களுக்கும் சேர்த்து சாப்பாடு வாங்கிட்டு வந்தால் என்ன எல்லாம் பேசுவேன் என்று எனக்கு தெரியும். இப்படிதான் நீ சாப்பிடாம இருக்கே என்று நான் பிரியாணி வாங்கிட்டு வந்தேன். அதே மாதிரி ரோகினியும் சாப்பிடாம இருக்கிறாளே என்று பாவப்பட்டு மீனா சாப்பாடு பண்ணி கொடுத்திருக்கிறாள்.
ஆனால் அதற்கு நீங்கள் இரண்டு பேரும் சேர்ந்து என்னலாம் பேசினீங்க, மறுபடியும் அப்படிப்பட்ட வார்த்தை எல்லாம் எங்களுக்கு தேவையே இல்ல உங்களுக்கு தேவையானதை நீங்களே சமைச்சு சாப்பிடுங்க என்று சொல்கிறார். உடனே ரோகிணி தோசை சுட ஆரம்பித்து விட்டார். தோசையும் நல்லா வரவில்லை, சட்னியும் சரியில்லை என்று விஜயா மற்றும் மனோஜ் சாப்பிடாமல் போய்விட்டார்கள்.
அப்பொழுது ரோகிணி கோபத்தில் இருந்த பொழுது மீனா, ரோகினிடம் நீங்கள் நிறைய கடன் வாங்குகிறீர்களா? அதுவும் அந்த ரவுடி சிட்டியிடம் இரண்டு மூன்று தடவை பணத்தை வட்டிக்கு வாங்கி இருக்கீங்க. கொஞ்சம் கவனமாக இருங்கள் அவன் மோசமானவன் என்று சொல்கிறார். இந்த விஷயம் மீனாவுக்கு தெரிந்து போய் விட்டதே என்ற பதட்டத்தில் ரோகினி முகம் மாறிவிட்டது. அத்துடன் ரோகிணி ஏதோ மறைக்கிறார் என்ற விஷயமும் மீனா மற்றும் சுருதிக்கு தெரிந்து விட்டது.
அடுத்ததாக முத்து, ரவியிடம் ரோகிணி சிட்டியிடம் பணத்தை வட்டிக்கு வாங்கினதே சொல்லுகிறார். இதைப் பற்றி மனோஜிடம் கேட்க சொல்கிறார். அப்பொழுதுதான் மனோஜ்க்கே தெரிகிறது ரோகிணி கடன் வாங்கி இருக்கிறார் என்று. ஆனாலும் இவர்களிடம் விட்டுக் கொடுக்காமல் நீங்கள் எங்கள் விஷயத்தில் தலையிட வேண்டாம் என்று சொல்லிவிட்டு போய்விடுகிறார். பிறகு ரோகிணியிடம், மனோஜ் நீ பணக்கார வீட்டு பொண்ணு தானே.
உங்க அப்பா மலேசியால கோடீஸ்வரர் தானே என்று சந்தேகப்பட்டு கேட்க ஆரம்பித்து விட்டார். உடனே ரோகிணி முகம் அப்படியே மாறிஅதிர்ச்சியாகி நிற்கிறார். ஏன் உனக்கு திடீரென்று சந்தேகம் என்னாச்சு என்று கேட்கும் பொழுது முத்து தான் தேவை இல்லாமல் பேசி என்னை குழப்பி விட்டுட்டான். நீ ஏதோ அடிக்கடி அந்த சிட்டியிடம் வட்டிக்கு பணத்தை வாங்கி செலவழிப்பதாகவும் சொல்கிறார். நீ ஏன் என்னிடம் சொல்லவில்லை என்று மனோஜ், ரோகினிடம் கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார்.
அந்த வகையில் இது வெறும் ஆரம்பம் தான் என்பதற்கு ஏற்ப மீனா மற்றும் முத்து ரோகிணி பற்றிய அடுத்த அடுத்த விஷயங்களை வெளிகொண்டு வந்து ஒவ்வொரு விஷயத்தையும் குடும்பத்தில் இருப்பவர்களிடம் போட்டு கொடுக்கப் போகிறார். போன வாரம் ரோகினி சிக்கின மாதிரி இந்த வாரமும் இந்த விஷயத்தில் சிக்கிக் கொள்ளப் போகிறார். அடுத்ததாக சத்திய பற்றிய வீடியோவை முத்து ஃபோனில் இருந்து திருடி சிட்டிக்கு அனுப்பியது ரோகிணி தான் என்ற விஷயமும் செருப்பு தைக்கும் தாத்தாவிடம் இருக்கும் மொபைல் மூலம் முத்து கண்டுபிடிக்கப் போகிறார்.