செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 17, 2024

அவள அடிச்சு கொல்லனும், வாய் விட்ட முத்துக்குமரன்.. ஒரு ரெட் கார்டு பார்சல்!

Bigg Boss 8: பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி 11 வது வாரம் நடந்து கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட நூறு நாளை நெருங்க இன்னும் ஒரு மாத காலம் தான் இருக்கிறது.

வீட்டிற்குள்ளும் ஆட்கள் அதிகமாக இருக்கிறார்கள். அதே போல் இன்னும் வரைக்கும் டைட்டில் யார் வாங்குவார் என்பதை கணிக்கவே முடியவில்லை.

பாதிக்குப் பாதி பேர் முத்துக்குமரன் தான் டைட்டில் வின்னர் என்பது போல் பேசி வருகிறார்கள். காரணம் அவர் பேசும் தமிழ் மற்றும் சமயோகித புத்தியும்தான்.

ஒரு ரெட் கார்டு பார்சல்!

இதைத் தாண்டி சிறப்பாக விளையாடக் கூடியவரா என்று பார்த்தால் கிடையாது என்று தான் சொல்ல வேண்டும்.

இந்த நிலையில் முத்துக்குமரன் பற்றி சமூக வலைத்தளத்தில் ஒரு விஷயம் வைரலாகி வருகிறது. நாட்கள் நெருங்க நெருங்க பிசிகல் டாஸ்க் பிக் பாஸ் வீட்டில் தொடங்க ஆரம்பித்திருக்கிறது.

இந்த நிலையில் முத்துக்குமரன் சௌந்தர்யாவை பற்றி பேசும் பொழுது அவளை அடிச்சு கொல்லனும் என்ற வார்த்தையை உபயோகப்படுத்தி இருக்கிறார்.

தற்போது இதை பெரிய அளவில் விமர்சித்து வருகிறார்கள். கொலை பண்ண திட்டம் போட்டு இருக்கிறார் முத்துக்குமரன் என்னும் அளவுக்கு இது சர்ச்சை ஆகிக்கொண்டிருக்கிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு என்று நிறைய விதிமுறைகள் இருக்கின்றன அப்படி இருக்கும் பொழுது முத்துக்குமரன் பேசிய இந்த வார்த்தையை பற்றி விஜய் சேதுபதி கேள்வி கேட்டே ஆக வேண்டும்.

அவருக்கு ரெட் கார்டு கொடுக்க வேண்டும் என்ற பேச்சுக்கள் எழுந்து வருகின்றன.

- Advertisement -

Trending News