Biggboss 8: அவன் அவன் எடுக்கிற முடிவு நமக்கு சாதகமாக தான் இருக்கு. அப்படித்தான் நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் பல சம்பவங்கள் நடந்தது.
பவித்ரா நான்கு முறையாக கேப்டன் பதவிக்கு போட்டி போட்டார். இந்த முறையாவது ஜெயிச்சுட்டு போகட்டும் என முத்து விட்டுக் கொடுத்தது பச்சையாக தெரிந்தது.
ஆனால் பிக்பாஸ் அதை கண்டுபிடித்ததும் இல்ல பாஸ் நான் கவனக்குறைவா இருந்துட்டேன். அப்படி இப்படி என சமாளித்தார். ஆனாலும் பார்ப்பவர்களுக்கு உண்மை நன்றாகவே விளங்கியது.
அதனால் தான் பிக் பாஸ் கூட நேற்று அவ்வளவு கோபமாக பேசினார். இதில் முத்துவுக்கான எதிர்ப்பு என்பதை விட ஆதரவு இன்னும் அதிகரித்துவிட்டது தான் கடைசிநேர ட்விஸ்ட்.
பிக்பாஸுக்கே ட்விஸ்ட் வைத்த முத்து
அந்த அளவுக்கு இருந்தது அவருடைய கதறலும் அழுகையும். நீண்ட நேரம் அவர் பிக் பாசிடம் சாரி சாரி என சொல்லியபடி இருந்தார். இதை பார்த்த அவருடைய ரசிகர்கள் ரொம்பவும் பீல் ஆகிப் போனார்கள்.
நீ கவலைப்படாத குமரா நாங்க இருக்கோம் நீ தான் இந்த சீசன் டைட்டில் வின்னர் என கமெண்ட்களை குவிக்க ஆரம்பித்து விட்டனர். உண்மையில் முத்துவின் பிளான் வேறு.
அதாவது பவித்ராவுக்கு விட்டுக் கொடுப்பதன் மூலம் அவரை கேப்டன் ஆக்கிவிடலாம். அதே சமயம் மக்கள் மத்தியில் தன்னுடைய செல்வாக்கு இன்னும் உயரும் என அவர் நினைத்திருக்கலாம்.
ஆனால் பிக் பாஸ் அதை கண்டுபிடித்தவுடன் மொத்தமும் போச்சு என்ற அதிர்ச்சியும் குற்ற உணர்ச்சியும் தான் முத்துவின் அழுகைக்கு காரணம். ஆனால் இதுவும் கூட அவருக்கு சாதகமாகத்தான் முடிந்துள்ளது.
தற்போது முத்துவுக்கு ஆதரவு அதிகரித்து விட்டது. இதை அடுத்த வார ஓட்டு நிலவரத்தில் நம்மால் பார்க்க முடியும். எது எப்படியோ முத்து தான் டைட்டில் வின்னர் என ஆடியன்ஸ் முடிவு செய்துவிட்டனர்.