ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

பிக்பாஸ் சீசன் 8 வெற்றி கோப்பையை வென்ற முத்துக்குமரன்.. பரிசு தொகையுடன் கை நிறைய சம்பளத்தை அள்ளிய வின்னர்

Biggboss 8-Muthukumaran: பிக்பாஸ் ஆடியன்ஸ் ஆவலுடன் எதிர்பார்த்த தருணம் நடந்து முடிந்துவிட்டது. 105 நாட்களை வெற்றிகரமாக கடந்து டைட்டிலை வென்றுள்ளார் முத்துக்குமரன்.

ஆரம்பத்தில் வீட்டிற்குள் பல சர்ச்சைகளுக்கும் விமர்சனங்களுக்கும் ஆளானவர் தான் இவர். போகப்போக தன்னுடைய பேச்சுத் திறமையால் ஆடியன்ஸின் கவனத்தை தன் பக்கம் திருப்பினார்.

அதைத்தொடர்ந்து ஒவ்வொரு டாஸ்க்கிலும் இவருடைய பங்களிப்பு நிச்சயம் வித்தியாசமானதாக தான் இருக்கும். அதுவே வீட்டுக்குள் சில சண்டைகளுக்கும் காரணமாக அமைந்தது.

ஆனாலும் இறுதிவரை கேலி கிண்டல் அவமானம் பொறாமை அனைத்தையும் கடந்து திறமையான போட்டியாளராக இவர் முன்னேறினார். தனக்கு போட்டியாக இருக்கும் ஒவ்வொருவரையும் சரியாக காய் நகர்த்தி வீழ்த்தியும் இருக்கிறார்.

இது விமர்சனமாக மாறினாலும் இந்த விளையாட்டிற்கு இது சரியானது தான். அதனாலேயே அவருக்கு நாளடைவில் ரசிகர்கள் மட்டுமின்றி வாக்குகளும் குவிய தொடங்கியது.

பரிசு தொகையுடன் கை நிறைய சம்பளத்தை அள்ளிய வின்னர்

அதன்படி தற்போது இந்த சீசன் டைட்டிலை வென்றுள்ள இவர் 40 லட்சத்து 50 ஆயிரம் பரிசுத்தொகையையும் கைப்பற்றியுள்ளார். அது மட்டும் இன்றி ஒரு நாளைக்கு இவருக்கு 10,000 சம்பளம் பேசப்பட்டிருக்கிறது.

அப்படி என்றால் 105 நாட்கள் அவர் வீட்டில் இருந்துள்ளார். அதை வைத்து பார்க்கும் போது இவருடைய சம்பளம் 10 லட்சத்து 50 ஆயிரம் ஆகும். இது தவிர 50,000 பணப்பெட்டியை கைப்பற்றியுள்ளார்.

ஆக மொத்தம் இவர் பிக்பாஸ் மூலம் 51 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை பெற்றுள்ளார். மிடில் கிளாஸ் பையனாக ஏகப்பட்ட கனவுகளுடன் நுழைந்த அவருக்கு இந்த மேடை கனவை நினைவாக்கி இருக்கிறது. அவருக்கு நம்முடைய வாழ்த்துக்கள்.

Trending News