Anna Serial: ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வருகின்ற அண்ணா சீரியலில், இசக்கி சவுந்தரபாண்டி வீட்டில் இருக்கும் பொழுது அனுபவித்த கொடுமையை தாங்க முடியாமல் சண்முகம் ஒரு அண்ணனாக பொங்கி எழுந்து தங்கையை கௌரவமாக வீட்டிற்கு திரும்ப கூட்டிட்டு வந்து விட்டார். ஆனால் போலீஸ் மேலதிகாரியாக ஆவதற்கு ட்ரெயினிங் போன முத்துப்பாண்டி வீட்டிற்கு வந்ததும் இசக்கி பட்ட அவமானத்திற்கு சவுந்தரபாண்டியிடம் கோபப்பட்டு சண்டை போட்டார்.
பிறகு சண்முகம் வீட்டிற்கு வந்து இசக்கிக்கு இனிமேல் எங்கள் வீட்டில் எந்த பிரச்சினையும் வராது என்று திரும்ப கூப்பிட்டார். ஆனால் சண்முகம் என் தங்கச்சி எங்கேயும் வர மாட்டாள் என்று பிடிவாதமாக சொல்லிய நிலையில் முத்துப்பாண்டி கோவப்பட்டு திரும்பப் போய்விட்டார். ஆனாலும் இசக்கியை எப்படியாவது கூட்டிட்டு போக வேண்டும் என்று பல வழிகளில் முத்துப்பாண்டி முயற்சி எடுத்தார்.
ஆனால் இசக்கி எங்கள் அண்ணன் சொல்லாமல் நான் எங்கேயும் வரமாட்டேன் என்று சண்முகம் கிழித்த கோட்டை தாண்டாமல் அப்படியே இருந்தார். இந்த சான்ஸை பயன்படுத்திய சவுந்தரபாண்டி, முத்துப்பாண்டிக்கு வேற கல்யாணத்தை ஏற்பாடு பண்ணலாம் என்று தடபுடலாக கல்யாண வேலைகளை பார்த்தார். முத்துப்பாண்டியும் இசக்கி மற்றும் சண்முகம் மீது இருந்த கோபத்தினால் கல்யாணத்திற்கு ஓகே சொல்லிவிட்டார்.
இந்த விஷயத்தை கேள்விப்பட்டதும் இசக்கி மற்றும் குடும்பத்தில் இருப்பவர்கள் அப்படியே நொறுங்கிப் போய்விட்டார்கள். ஆனால் சண்முகம் மட்டும் எதற்கும் அசராமல் கல்யாணத்துக்கு நம் குடும்பத்துடன் போகலாம் என்று இசக்கியையும் கூட்டிட்டு மண்டபத்திற்கு போய் விட்டார்கள். அங்கே முத்துப்பாண்டி தாலி கட்டும் தருணம் வரை சண்முகம் எந்தவித பதட்டமும் இல்லாமல் அப்படியே கல்யாணத்தை பார்ப்பதற்கு தயாராகி விட்டார்.
ஆனால் இசக்கி கண்ணில் மட்டும் கண்ணீர் வந்து கொண்டே இருந்தது. இருந்தாலும் அண்ணன் பேச்சை மீறாமல், கல்யாணத்தை தடுக்கவும் முடியாமல் அமைதியாக வேடிக்கை பார்த்தார். பிறகு முத்துப்பாண்டி வேற ஒரு பொண்ணுக்கு தாலி கெட்டுப் பொழுது மனசு கேட்காமல் தாலியே தூக்கி எறிந்து விட்டு இசக்கியை தவிர என் மனதில் வேறு யாரையும் பொண்டாட்டியா வச்சு பார்க்க முடியாது என சொல்லி இசக்கியை அரவணைத்துக் கொண்டார்.
இசக்கியும் முத்துப்பாண்டி இல்லாமல் வாழ முடியாது என்ற நிலைமையில் இருக்கும் பொழுது சண்முகம் எங்க வீட்டில் வந்து வீட்டோட மாப்பிள்ளையாக வாழுங்க என்று கூப்பிட்டு விட்டார். முத்துப்பாண்டியும் கொஞ்சம் கூட யோசிக்காமல் இசக்கி தான் முக்கியம் என்று முடிவெடுத்து சண்முகத்தின் வீட்டிற்கு வந்து விட்டார். ஆனால் வீட்டிற்குள் நுழையும் பொழுது எனக்கு இந்த வீட்டில் எந்தவித அவமானமும் வரக்கூடாது.
அப்படி கொஞ்சம் அவமானம் வந்துவிட்டால் நீ என்னுடன் வெளியே வந்து விட வேண்டும் என்று இசக்கியிடம் சத்தியம் கேட்கிறார். உடனே இசக்கி, சண்முகத்தை பார்த்து என்ன பண்ணுவது என்று கேட்கிறார். அதற்கு சண்முகம் தாராளமாக நீ சத்தியம் பண்ணி கொடு என்று சொல்லிய நிலையில் முத்துப்பாண்டிக்கு இசக்கி சத்தியம் பண்ணி கொடுத்து விடுகிறார்.
அந்த வகையில் பெண்கள் வீட்டில் வந்து மாப்பிள்ளைகள் தாராளமாக வாழலாம் என்று சொல்லும் படி ஒரு புரட்சியை சண்முகம் செய்து காட்டி விட்டார். ஆனால் இனி சௌந்தரபாண்டி சும்மா இருக்க மாட்டார் இதை வைத்து இன்னும் என்ன பிரச்சனை பண்ணலாம் என்று ஏதாவது பிளான் பண்ண போகிறார்.