
Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், காதலிப்பது தப்பில்லை ஆனால் யாரை காதலிக்கிறோம் எப்படிப்பட்டவரை நம்புகிறோம் என்பது தான் முக்கியம். இதில் அரசி கோட்டை விட்டுவிட்டார். அதனால்தான் அரசியின் காதல் விஷயம் பாண்டியன் குடும்பத்திற்கு தெரிய வந்ததும் ஒவ்வொருவரும் நொறுங்கிப் போய் விட்டார்கள்.
அத்துடன் 20 வயசிலேயே இந்த மாதிரி ஒரு திருட்டு வேலையை பார்த்ததை நம்ப முடியாத பாண்டியன் அப்படியே வாய் அடைத்துப் போய்விட்டார். செந்தில் கதிர் மற்றும் பழனிவேலு மூன்று பேரும் சேர்ந்து முத்துவேல் வீட்டிற்கு சென்று குமரவேலுவை வெளுத்து விட்டார்கள். இதனால் முத்துவேல் குடும்பத்திற்கும் குமரவேலு செய்த விஷயம் தெரிய வந்துவிட்டது.
உடனே முத்துவேல், குமரவேலு கன்னத்தில் அடித்து என்ன காரியம் பண்ணி இருக்கிறாய். அந்த குடும்பத்தை பழிவாங்க வேண்டும் என்று நீ இப்படி பண்ணினியா என்று கேட்கிறார். குமரவேலு இதற்கு பதில் சொல்லாமல் நின்ற நிலையில் சக்திவேல், அவன் இப்படி பண்ணியதற்கு நீங்க தான் காரணம். உங்க பொண்ணு இந்த குடும்பத்தை பற்றி யோசிக்காமல் அவனை காதலித்ததால் இவனுக்கு யாரும் பொண்ணு கொடுக்க வரவில்லை.
நீங்களும் உன் பையனுக்கு நான் நல்ல குடும்பமா பார்த்து வைக்கிறேன் என்று சொன்னீங்க. ஆனால் இதுவரை எதுவும் பண்ண மாதிரி தெரியலை, அதனால் தான் அவன் அந்த மாதிரி ஒரு முடிவு எடுத்து விட்டதாக சொல்லிவிட்டார். இதோடு விடாமல் சக்திவேல், பாண்டியன் குடும்பத்தை அவமானப்படுத்தும் விதமாக வாசலில் நின்று அரசியை பற்றி தவறாக பேசி பணம் இருக்கு என்பதற்காக பொண்ணு வைத்து வளைத்து போட முடிவு பண்ணிட்டியா?
உனக்கெல்லாம் வெக்கமா இல்லையா? நல்ல குடும்பத்து பொண்ணு யாரும் இப்படி பண்ண மாட்டாங்க, ஆனா உன் பொண்ணு யாருக்கும் தெரியாமல் படத்துக்கு போயிருக்கா? மோதிரத்தையும் கையில போட்டு இருக்கா? இன்னும் என்னவெல்லாம் பண்ணி இருக்கிறாளோ, என்று வாய் கூசாமல் பாண்டியன் குடும்பத்தையும் அரசியையும் அசிங்கப்படுத்தி விட்டார்.
இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த பாண்டியன் எதுவும் பேச முடியாமல் அவமானப்பட்டு நிற்கிறார். ஆனால் கதிர் மற்றும் செந்தில் சக்திவேலிடம் சண்டை போட ஆரம்பித்து விட்டார்கள். பிறகு ராஜி மற்றும் மீனா அவர்களை சமாதானப்படுத்தி உள்ளே கூட்டிட்டு போய்விடுகிறார். இதனை தொடர்ந்து முத்துவேல், உன் மகன் பாண்டியன் மகளை காதலித்தது உனக்கு முன்னாடியே தெரியுமா?
ஏனென்றால் இந்த விஷயம் தெரிந்தவுடன் நீ அதிர்ச்சியும் ஆகவில்லை கோபமும் படவில்லை. உன் பையன் மீது எந்த தவறும் இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் தான் நீ பேசுகிறாய்? என்ன நடக்குது என்று கேட்கிறார். உடனே குமரவேலு, நம்ம வீட்டு பொண்ண இழுத்துட்டு போய் கல்யாணம் பண்ணதனால, நானும் அதே பண்ண வேண்டும் என்பதற்காக பழிவாங்க தான் இந்த மாதிரி பண்ணினேன் என்று உண்மையை உலறிவிடுகிறார்.
அதற்கு முத்துவேல் என்னதான் இருந்தாலும் ஒரு பொண்ணோட வாழ்க்கையும் பெண்பிள்ளையும் நாம் பகடைக்காயாக பயன்படுத்தக் கூடாது. அது சரியானதாக இருக்காது என்று பாண்டியன் குடும்பத்திற்கு சப்போர்ட்டாக பேசி குமரவேலுக்கு புரிய வைக்கிறார். அடுத்ததாக அப்பத்தா, இனி அரசியே பார்த்து பேசி தொந்தரவு பண்ண மாட்டேன் என்று சத்தியம் பண்ணு என குமரவேலுமிடம் கேட்கிறார்.
ஆனால் இவ்வளவு நடந்தும் ராஜி ஊமையாக நின்று வேடிக்கை பார்ப்பது தான் கொஞ்சம் கடுப்பாக இருக்கிறது. அட்லீஸ்ட் முத்துவேலுவை தனியாக பார்த்து சந்தித்து ராஜி கல்யாணம் எப்படி நடந்தது. என்னுடைய வாழ்க்கையும் நம்முடைய குடும்ப மானத்தையும் காப்பாற்றுவதற்காக தான் கோமதி அத்தை கதிரை என் கழுத்தில் தாலி கட்ட சொன்னார் என்ற விஷயத்தை சொல்லி இருந்தால் இந்த பிரச்சனை இவ்வளவு தூரத்துக்கு வந்து இருக்காது. இனியாவது ராஜி, முத்துவேலுக்கு உண்மையை சொன்னால் கொஞ்சம் நன்றாக இருக்கும்.