வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

பாட்ஷா ரஜினியுடன் வெளிவந்த முத்தையாவின் முத்துராமலிங்கம் பட போஸ்டர்.. வெறிபிடித்த சிங்கம் போல இருக்கும் ஆர்யா

இந்த வருடம் பெரிய அளவில் வெற்றி திரைப்படங்களை கொடுக்காத ஆர்யா எப்படியாவது ஒரு சூப்பர் ஹிட்டை கொடுக்க வேண்டும் என்ற முயற்சியில் தீவிரமாக களமிறங்கி இருக்கிறார். அதற்காக அவர் இப்போது கொம்பன் முத்தையாவுடன் கூட்டணி அமைத்துள்ளார். இவர்கள் இணையும் அந்த படம் சமீபத்தில் பூஜையுடன் தொடங்கப்பட்டது.

ஆனால் அந்த படம் பற்றிய எந்த தகவலும் இதுவரை வெளியாகாமல் இருந்தது. பொதுவாகவே முத்தையா இயக்கும் படங்கள் எல்லாமே கிராமத்து பாணியில் தான் இருக்கும். அந்த வகையில் அவர் இயக்கத்தில் சமீபத்தில் வந்த விருமன் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதை தொடர்ந்து ஆர்யா படத்திற்கான எதிர்பார்ப்பும் அதிகமாக இருந்தது.

Also read: தோல்விக்கு பின்னும் தலைகால் புரியாமல் ஆடும் ஆர்யா.. ஒரே படத்தை வச்சு எத்தனை வருஷம் ஓட்ட போறீங்க

இந்நிலையில் ஆர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று அந்த படத்தின் டைட்டில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் என இப்படத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது. வித்தியாசமான பெயரில் வெளியான இந்த பெயரை காட்டிலும் போஸ்டர் தான் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்திருக்கிறது.

வெறிபிடித்த சிங்கம் போல இருக்கும் ஆர்யா

arya-actor
arya-actor

ஏனென்றால் அந்த போஸ்டரில் ஆர்யா ஒரு சேரில் கெத்தாக அமர்ந்திருக்கிறார். அதுவும் கருப்பு சட்டை, வேட்டி, கழுத்தில் தாயத்துடன் கூடிய கயிறு, கையில் ஒரு கயிறு, செருப்பு, நெற்றியில் பொட்டு என அனைத்தும் கருப்பு நிறத்திலேயே இருக்கிறது. அதிலும் ஆர்யா முகத்தில் ரௌத்திரத்துடன் தாடி, மீசை என்று வேற லெவல் கெட்டப்பில் இருக்கிறார்.

Also read: மொக்க படத்தை தலையில் கட்டிய ஆர்யா.. உண்மையை வெளியே சொல்லி அசிங்கப்படுத்திய உதயநிதி

அவருக்கு பின்னால் பாட்ஷா படத்தில் வரும் ரஜினி சேரில் அமர்ந்திருப்பது போன்ற போட்டோவும் இருக்கிறது. இதுதான் படத்தின் மீதான ஆவலை இன்னும் தூண்டியுள்ளது. அது மட்டுமல்லாமல் போஸ்டரில் கருப்பு நிறம் ஆக்கிரமித்து இருக்கும் போது படத்தின் பெயர் மட்டும் ரத்த சிவப்பு நிறத்தில் இருக்கிறது. இதிலிருந்து படம் எந்த அளவுக்கு வன்முறை காட்சிகள் நிறைந்ததாக இருக்கும் என்று தெரிகிறது.

இயல்பாகவே முத்தையாவின் திரைப்படத்தில் அடிதடி காட்சிகளுக்கு பஞ்சம் இருக்காது. அதே போன்று இந்த படமும் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. அந்த வகையில் தற்போது வெளியாகியிருக்கும் இந்த போஸ்டர் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மேலும் ரசிகர்கள் பலரும் ஆர்யாவுக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Also read: சூப்பர் கதைகள் அமைந்தும் கொண்டாடாத ஆர்யாவின் 5 படங்கள்.. தமிழ் சினிமாவை புரட்டிப் போட்ட படம்

Trending News