ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

லோகேஷை தொடர்ந்து குட்டி பவானியை சரியாக பயன்படுத்திய முத்தையா.. காதர் பாட்ஷாவில் நடந்த தரமான சம்பவம்

நேற்று முத்தையா இயக்கத்தில் ஆர்யா, சித்தி இத்னானி இணைந்து நடித்திருக்கும் ‘காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம்’ என்ற திரைப்படம் உலகெங்கும் ரிலீஸ் ஆகியுள்ளது. இந்த படத்தில் முதன் முதலாக ஆர்யா கிராமத்து இளைஞராக மாஸ் காட்டியிருக்கிறார்.

பொண்ணுக்காகவும் மண்ணுக்காகவும் நடக்கும் துரோகமும் சண்டையும் தான் காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம் படத்தின் ஒன் லைன் ஸ்டோரி. ஆக்சன் கலந்த சென்டிமென்ட் திரைப்படமான காதர் பாட்ஷாவில் குட்டி பவானி தரமான சம்பவத்தை செய்திருக்கிறார்.

Also Read: ரஜினியின் கடைசி படம் லோகேஷ் இல்ல.. வேறு இயக்குனரை லாக் செய்த சூப்பர் ஸ்டாரின் போஸ்டர்

மாஸ்டர் மகேந்திரன் காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம் திரைப்படத்தில் வெறும் 4 நிமிடம் மட்டுமே திரையில் தோன்றினாலும் அந்த ஒரு காட்சியில் தெறிக்க விட்டிருக்கிறார். அதிலும் இவருக்கு சாமி வந்த ஒரு சீனில் சிறப்பாக நடித்தது மட்டுமல்லாமல் அவருடைய எக்ஸ்பிரஷன் மெய்சிலிர்க்க வைக்கும் அளவுக்கு இருந்தது.

சிறுவயதிலிருந்தே டாப் நடிகர்களுடன் குழந்தை நட்சத்திரமாக நடித்து பின்னி பெடல் எடுத்துக் கொண்டிருக்கும் மகேந்திரனுக்கு தீனி போடும் வகையில் இந்த கதாபாத்திரத்தை முத்தையா அமைத்திருக்கிறார். மாஸ்டர் படத்தில் எப்படி லோகேஷ் குட்டி பவானியாக மகேந்திரனை பயன்படுத்தினாரோ அதேபோல முத்தையாவும் காதர் பாட்ஷாவில் இடம்பெற்ற ஃப்ளாஷ் பேக் காட்சியில் மகேந்திரனை பயன்படுத்தி இருக்கிறார்.

Also Read: முத்தையா, ஆர்யாவின் காம்போவில் வெளிவந்த காதர் பாட்ஷா தேருமா? பரபரப்பை கிளப்பிய ட்விட்டர் விமர்சனம்

இன்று வரை மாஸ்டர் படத்தில் மகேந்திரன் நடித்த காட்சிகள் ரசிகர்களின் ஃபேவரிட் சீன் ஆக இருக்கிறது. அதேபோலவே இந்தப் படத்திலும் மகேந்திரன் தரமான சம்பவத்தை செய்திருக்கிறார். இதனால் ரசிகர்களும் இப்படி ஒரு திறமைசாலியை ஏன் பயன்படுத்த தயங்குகிறீர்கள் என, முன்னணி இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் நல்லதொரு வாய்ப்பை மாஸ்டர் மகேந்திரனுக்கு கொடுக்க வேண்டும் என்றும் சிபாரிசு செய்கின்றனர்.

கூடிய விரைவில் மாஸ்டர் மகேந்திரனும் தனக்கேத்த ஒரு கதையை தேர்ந்தெடுத்து, நாலு நிமிடம் மட்டுமல்ல இரண்டரை மணி நேரம் முழுமையாக திரையில் தோன்றி ரசிகர்களை மகிழ்விக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம். இனிவரும் நாட்களில் அவருக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read: Kathar Basha Endra Muthuramalingam Review- அல்லாவும் அய்யனாரும் ஒன்னுதான்.. காதர் பாட்ஷா தேறுமா படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம்

Trending News