புதன்கிழமை, ஜனவரி 8, 2025

நடிகர் கமலால் என் குடும்பமே அழுதது.. வேதனையோடு பேசிய கார்த்திக் சுப்புராஜ்

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தீவிர ரஜினி ரசிகர். அவர் மட்டும் இல்ல அவர் அப்பா, அம்மா என அவர் குடும்பமே ரஜினி ரசிகர்கள். அப்படி இருக்கும் பொழுது கமல் படங்களை பார்ப்பார்களா? என்று அவரே பதில் சொல்கிறார்.

கார்த்திக் சுப்புராஜ் ரஜினி ரசிகராக இருந்தாலும் தீவிர சினிமா ரசிகர் கூட. அதனால் ரசிகனாக ரஜினி படங்களும், கலைஞராக அனைத்து நல்ல படங்களையும் பார்ப்பாராம்.

கமல் படத்தில் மகாநதி படம் மிகவும் பிடிக்குமாம். பொதுவாக அனைவரும் கமலஹாசன் நடித்த அன்பே சிவம் படத்தை தான் சொல்வார்கள். ஆனால் அந்த படம் சரியாக பாக்ஸ் ஆபீஸ் ஹிட் அடிக்கவில்லை.

அதே மகாநதி படத்தை எடுத்துக் கொண்டால் ரொம்ப எளிமையான குடும்ப படம். அதில் அவ்வளவு சுவாரசியமாக காட்சிகளை வைத்தது சாதாரண விஷயம் அல்ல.

மேலும் அந்த படத்தை தியேட்டரில் பார்க்கும் பொழுது ஒரு ஒரு காட்சிக்கும் என் குடும்பமே அழுதது என ஒரு பேட்டியில் சொல்கிறார் கார்த்திக் சுப்புராஜ்.

Trending News