பாட்டில் ராதா பட ப்ரமோஷன் விழாவில் இஷ்டத்துக்கு அருவருப்பாய் பேசி மாட்டிக் கொண்டார் மிஷ்கின். மேடையில் சரளமாய் கெட்ட வார்த்தை பேசி அனைவரையும் அதிரசெய்தார். பத்திரிகையாளர்கள், பெண்கள், இருக்கிறார்கள் என்று கொஞ்சம் கூட யோசிக்காமல் பேசிவிட்டார்.
இப்பொழுது பேட் கேர்ள் பட ப்ரொமோஷனுக்கு தாமாகவே வந்துள்ளார். அழைக்காத விருந்தினராக வந்த அவர் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டார். இதற்கு பின்னால் ஒரு பெரிய கண்கட்டி வித்தை இருக்கிறது. மேடையில் பல பேரிடம் மன்னிப்பு கேட்டு தான் தன்னுடைய உரையை தொடங்கினார் மிஸ்கின்.
தற்போது மிஸ்கின் இயக்கி வரும் படம் ட்ரெயின். இந்த படம் பிப்ரவரி 21ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. கடந்த முறை மேடையில் பேசிய மிஸ்கினுக்கு எல்லா பக்கத்திலும் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் தாம் இயக்கிய ட்ரெயின் படத்திற்கு ஏதாவது ஆபத்து வந்துவிடுமோ என பயந்துவிட்டார்.
அதுமட்டுமின்றி இந்த படத்தின் தயாரிப்பாளர் எஸ் தானு மிஸ்கின் பேச்சை பேச்சை கேட்டு சற்று அப்செட்டில் இருந்துள்ளார். எங்கே படத்திற்கு மிஷ்கின்னின் பேச்சு நெகட்டிவாக அமைந்து விடுமோ என பயத்தில் இருந்து வந்தார்.
வரும் காலங்களில் ட்ரெயின் பட ப்ரொமோஷனுக்காக மிஸ்கின் மீண்டும் பல மேடைகளில் பேச வேண்டும். இதனால் தான் அவர் தற்போது மன்னிப்பு கேட்டுள்ளார். பிப்ரவரி 10ஆம் தேதியிலிருந்து விஜய் சேதுபதி, மிஸ்கின், தானு என அனைவரும் ட்ரெயின் பட ப்ரொமோஷனில் கலந்து கொள்கிறார்கள்.