வியாழக்கிழமை, ஜனவரி 9, 2025

சைக்கோ கதைகளையே கையிலெடுத்து மிஷ்கின் மிரட்டிய 5 படங்கள்.. சேரனை வித்தியாசமாக காட்டிய புது முயற்சி

தமிழ் சினிமாவில் 2006 ஆம் ஆண்டு வெளியான சித்திரம் பேசுதடி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் மிஸ்கின். அதன் பின் தொடர் வெற்றி படங்களை கொடுத்த மிஷ்கின் திடீரென்று சைக்கோ கதைகளையே பெரும்பாலும் கையாள துவங்கினார்.

அஞ்சாதே: 2008ல் வெளிவந்த இத்திரைப்படத்தில் நரேன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். வித்தியாசமான கதை அம்சத்தை கொண்ட இத்திரைப்படத்தில் அஜ்மல் நரேனின் நண்பனாக இருந்து பின்பு பகைவனாக மாறிய பழிவாங்கும் படமாக இப்படம் அமைந்துள்ளது. இத்திரைப்படத்தில் இவர்களுடன் விஜயலட்சுமி ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சிறந்த இயக்குனர் என்ற விருதினை இயக்குனர் மிஸ்கின் பெற்றுள்ளார்.

Also Read: உங்க வாயினா எதுனாலும் பேசுவீங்களா.. உதயநிதியை வச்சிக்கிட்டு மேடையில் கடுப்பேற்றிய மிஸ்கின்

யுத்தம் செய்: 2011 ஆம் ஆண்டு மிஷ்கினி இயக்கத்தில் சேரன் நடிப்பில் வெளியான இந்த படம் ஒரு வித்தியாசமான கதை களம் கொண்ட திரைப்படமாகும். இதில் சேரனுடன், ஓஜி மகேந்திரன், லட்சுமிராமகிருஷ்ணன், பிரகாஷ்ராஜ் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். இதுவரை குடும்ப பாங்கான திரைப்படங்களில் மட்டுமே நடித்து வந்த சேரன் இத்திரைப்படத்தில் வித்தியாசமாக தோன்றிய அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.

ஓநாயும் ஆட்டுக்குட்டியும்: 2013 இல் வெளியான இத்திரைப்படத்தில் மிஸ்கின், ஸ்ரீ ஆதித்யா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தில் பாடல்கள் இல்லை. பின்னணி இசையை இளையராஜா இசை அமைத்துள்ளார். இயக்குனராக ரசிகர்களுக்கு தெரிந்த மிஷ்கின் இந்த படத்தின் மூலம் நடிகராகவும் மக்கள் மனதில் பரீட்சையமானார்.

Also Read: கொஞ்சம் கூட நாகரிகம், அறிவே இல்லாத மிஸ்கின்.. மேடையில் பேச கூட தகுதி இல்ல

நந்தலாலா: 2019 மிஷ்கின் இயக்கிய நடித்த இந்த படத்தில் அவருடன் முக்கிய கதாபாத்திரத்திலும் அஸ்வத் ராம் என்ற சிறுவனும் சேர்ந்து நடித்துள்ளனர். இந்த படம் ஜப்பானிய மொழியில் இருந்து ரீமேக் செய்யப்பட்ட திரைப்படம் ஆகும்.

சைக்கோ: 2020ஆம் ஆண்டு வெளியான சைக்கோ உளவியல் சார்ந்த திரைப்படமாகும். திரைப் படத்தில் உதயநிதி ஸ்டாலின், நித்யாமேனன், அதிதி ராவ் ஹைதாரி ஆகியோர் நடித்துள்ளனர். சைக்கோ வால் கடத்தப்படும் பெண்கள் தன்னை ஹீரோ உதயநிதி காப்பாற்ற வருவார் என்ற நம்பிக்கையில் கதைகளம்அமைந்துள்ளது.

Also Read: தியேட்டரில் பதற வைத்த 8 பேய் படங்கள்.. உச்சகட்ட பயத்தை காட்டிய மிஸ்கின்

இவ்வாறு இந்த 5 படங்களும் இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் சைக்கோ கதைகளத்தை கொண்ட திரில்லர் திரைப்படமாக அமைந்தது. இத்திரைப்படத்தில் வரும் நடிகர்கள் தங்களின் வித்தியாசமான தோற்றத்தினை திரையில் காட்டி தங்களின் மறு முகத்தையும் காட்டியுள்ளனர்.

Trending News