Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்

லோகேஷிடம் கதை சொன்ன மிஷ்கின்.. அஞ்சாதே 2-வுக்கும் ரெடியாகும் இயக்குநர்!

லோகேஷிடம் கதை சொன்ன மிஷ்கின்.. அஞ்சாதே 2-வுக்கும் ரெடியாகும் இயக்குநர்!

கோலிவுட்டில் தனக்கென ஒரு தனித்துவமான கதை சொல்லும் பாணியை உருவாக்கியவர் இயக்குநர் மிஷ்கின்.வித்தியாசமான சப்ஜெக்ட்ஸ்,அழுத்தமான கேரக்டர்கள் எனத் தனது படங்கள் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.தற்போது இவரது அடுத்தகட்டத் படத்திட்டங்கள் சினிமா வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளன.


இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக அறிமுகமான ‘டி.சி’படம் ரசிகர்களிடையே கவனம் பெற்றது. இயக்குநராகப் பல வெற்றிப் படங்களைக் கொடுத்த லோகேஷ்,நடிகராகவும் தனது பயணத்தைத் தொடங்கியிருப்பது ரசிகர்களுக்கு புதிய அனுபவமாக இருந்தது.இந்நிலையில்,லோகேஷ் கனகராஜுடன் இணைந்து பணியாற்ற மிஷ்கின் ஆர்வம் காட்டியுள்ளார்.


சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசிய மிஷ்கின்,லோகேஷ் கனகராஜிடம் ஒரு கதையைச் சொல்லியிருப்பதாகவும், அவருக்கும் அந்தக் கதை மிகவும் பிடித்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.மேலும்,லோகேஷ் எப்போது தேதிகள் ஒதுக்குகிறாரோ,அப்போது அந்தப் படத்தை இயக்கத் தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார். இதனால் இவர்கள் இருவரும் இணையும் புதிய திரைப்படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


இதுமட்டுமின்றி,தனது திரைப்பயணத்தில் முக்கியமான இடத்தைப் பிடித்த ‘அஞ்சாதே’ படத்தின் இரண்டாம் பாகத்தையும் உருவாக்க மிஷ்கின் திட்டமிட்டுள்ளார்.நடிகர் நரேனை வைத்து ‘அஞ்சாதே 2’படத்தை இயக்குவதற்கான எண்ணம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும்,‘இச்சை’என்ற கதையையும் எழுதி முடித்துள்ளதாகவும்,தன்னிடம் இன்னும் 26 கதைகள் இருப்பதாகவும் சுவாரஸ்யமாகப் பகிர்ந்துள்ளார்.


ஒருபுறம் லோகேஷ் கனகராஜ் கூட்டணி,மறுபுறம் நரேனுடன் ‘அஞ்சாதே 2’என மிஷ்கினின் அடுத்தடுத்த அறிவிப்புகள் ரசிகர்களிடம் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளன.இருப்பினும்,இந்தப் படங்களின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு,படப்பிடிப்பு தொடங்கும் தேதி உள்ளிட்ட விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.

S

Suriya

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.