தமிழ் சினிமாவில் முந்தைய காலகட்டத்தில் இயக்குநர்கள், நடிகர்கள் போன்றவர்களை பார்ப்பது அவ்வளவு சுலபமில்லை. அவர்கள் மேடையில் பேசுவதை கேட்பதற்காகவே பல கூட்டங்கள் காத்திருக்கும். அவர்களும் பணிவாக அனைவருக்கும் பயன்படும் வகையில் தன்னடக்கத்துடன் பேசுவார்கள் அது அனைத்து ரசிகர்களுக்கும் ஒரு எடுத்துக்காட்டாக அமையும்.
ஆனால் இன்று ஒரு சிலரைத் தவிர அனைவரும் மேடை நாகரீகம் என்பது சுத்தமாக கிடையாது. இவர்கள்தான் சினிமா இவர்கள் இல்லையென்றால் சினிமா இல்லை என்ற எண்ணத்தில் பேசுவார்கள். அந்த வரிசையில் முக்கிய இடம் பிடிப்பவர் இயக்குனர் மிஸ்கின்.
இவர் யாரையும் சகட்டுமேனிக்கு அவன் இவன் வாடா போடா என்ற திமிருடன் பேசுவார். இது பல காலங்களாக தொடர்ந்து வருகிறது, இப்போது அது மோசமான நிலையில் பேசும் அளவிற்கு சென்று விட்டார். ஒரு சில நாட்களுக்கு முன்பு நடந்த விஜய் ஆண்டனியின் கொலை திரைப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மிஸ்கின்.
யாரும் எதிர்பார்க்காத நிலையில் விஜய் ஆண்டனியை பார்த்து தம்பி நான் உங்க படத்தை பார்த்தது கிடையாது. அவங்க கூப்டாங்க இந்த நிகழ்ச்சிக்கு வந்து கலந்துகிட்டேன். இதைக் கேட்டு விஜய் ஆண்டனி எதையும் பேசாமல் மௌனமாக இருந்தார். எப்படி ஒரு மேடையில் பேச வேண்டும் என்ற நாகரீகம் கூடத் தெரியாத மிஸ்கின் இவர் படங்களை ஏன் நம் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் கூட நமக்குத் தோன்றுகிறது.
விஜய் ஆண்டனியும் இரண்டு மூன்று படங்கள் வெற்றி பெற்றிருக்கிறார். மிஸ்கின் இயக்கத்தில் வெளிவந்த படங்களில் ஒன்று இரண்டு மட்டுமே வெற்றி அப்படியிருக்க நீங்கள் அவரை தரக்குறைவாக பேசுவது எந்த விதத்தில் நியாயம் என்று பத்திரிக்கையாளர்கள் நேரடியாக கேட்டுக் கொண்டிருக்கின்றனர். தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனர்கள் எப்படி பேசுவார்கள் என்று பார்த்து கற்றுக்கொள்ளுங்கள் இல்லை என்றால் நீங்கள் பெரிய இயக்குனராக இருந்தும் பயனில்லை என்று கூறுகின்றனர்.
சினிமா தயாரிப்பாளர் கே ராஜன் அவர்களுக்கு தயாரிப்பாளர் சங்கம் பேச தடை விதித்தது போல தன்னை சினிமாவின் கடவுளாக நினைத்துக் கொண்டு இருக்கும் மிஷ்கினுக்கு இயக்குனர் சங்கம் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தடை விதிக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் இவரைப் பற்றி பத்திரிகைகளில் இவர் செய்யும் செயல்களை வெளிப்படையாக நாங்கள் எழுதுவோம் என்று கோபத்துடன் பத்திரிகையாளர் அந்தணன் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.