Director Mysskin: எல்லாவற்றையுமே வித்யாசமான கோணத்துடன் பார்ப்பவர்தான் இயக்குனர் மிஷ்கின். அவருடைய சித்திரம் பேசுதடி படத்தில் இருந்து தொடங்கி வெளிவர இருக்கும் பிசாசு 2 வரை அவருடைய கதைக்களமும் விசித்திரமாக தான் இருந்து வருகிறது. அதுமட்டுமின்றி பல திறமைகளை தன்னுள் வைத்திருக்கிறார்.
அதன்படி இயக்குனராக மட்டுமல்லாமல் பாடகர், பாடலாசிரியர் பல பரிமாணங்களை கொண்டிருக்கிறார். இப்போது இசையமைப்பாளராகவும் டெவில் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இந்நிலையில் மிஷ்கினின் படங்களில் இசை மற்றும் பாடல்களுக்கு எப்போதுமே முக்கிய பங்கு இருந்து வருகிறது.
Also Read : படப்பிடிப்பில் அதிக பிரசிங்கித்தனமாக செய்த மிஷ்கின்.. ஹீரோக்களை காக்கா பிடித்த மட்டமான வேலை
அந்த வகையில் அவருடைய படங்களில் இளையராஜா மற்றும் கார்த்திக் ராஜா ஆகியோர்தான் பெரும்பாலும் இசையமைத்து இருப்பார்கள். ஆனால் ஏதோ சில கருத்து வேறுபாடு காரணமாக இளையராஜா உடன் மிஷ்கின் பேசாமல் உள்ளார். ஆனாலும் இளையராஜாவின் இசை மீதும், அவர் மீதும் மிகுந்த மரியாதையை மிஷ்கின் வைத்திருக்கிறார்.
அதன்படி சமீபத்தில் மாடர்ன் சென்னை என்ற வெப் சீரிஸ் வெளியாகி இருந்தது. ஆறு அத்தியாயங்களைக் கொண்டுள்ள இந்த படத்தில் தியாகராஜன் குமாரராஜா ஒரு படத்தை இயக்கி இருந்தார். சமீபத்தில் மிஷ்கின் ஒரு பேட்டியில் இந்த இயக்குனரை பற்றி புகழ்ந்து பேசி இருந்தார். அவர் இன்னும் படங்களையே இயக்கவில்லை இப்போது தான் எடுத்துக்காட்டுக்காக சில படங்களை இயக்கி வருகிறார்.
Also Read : மிஷ்கின் சொன்னால் குட்டி போட்ட பூனை போல் பின்னால் வரும் விஜய் சேதுபதி.. மாவீரனில் செய்த உதவி
கண்டிப்பாக மிகப்பெரிய ஆளாக தியாகராஜன் குமாரராஜா வருவார் என மிஷ்கின் கூறியிருந்தார். இந்நிலையில் மாடர்ன் சென்னை வெப் சீரிஸில் தியாகராஜன் இயக்கிய படத்திற்கு இளையராஜா தான் இசையமைத்திருந்தார். இதற்கு காரணம் மிஷ்கின் தானம். அதாவது இயக்குனரிடம் நீ இளையராஜாவை போய் சந்தித்து இந்த படத்திற்கு இசையமைக்க சொல் என்று கேட்டுக் கொண்டாராம்.
அதன்படி இளையராஜா இசையமைத்த அந்த பாடல்கள் எல்லாமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் மிஷ்கினின் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்திலும் இளையராஜா அற்புதமாக இசையமைத்திருப்பார். இது பற்றி கூறிய மிஷ்கின் இளையராஜாவின் எச்சம் அல்லது அவர் சாப்பிட்டுவிட்டு கை உதறும்போது விழும் பருக்கை தான் நான் என கூறியிருக்கிறார்.
Also Read : சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொண்ட லோகேஷ்.. கிளைமாக்ஸ் ட்விஸ்ட்டை உடைத்த மிஷ்கின்