வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

மேடையில் அநாகரிகமாக கெட்ட வார்த்தை பேசிய மிஸ்கின்.. சைக்கோ இயக்குனருக்கு கொஞ்சநஞ்ச மானமும் போச்சு

இயக்குனர் மிஸ்கின் என்றாலே சர்ச்சைக்கு பேர் போனவர் என்பது அனைவரும் அறிந்தது தான். அவருடைய படங்களில் மட்டுமல்லாமல் பேச்சிலும் வித்தியாசம் இருக்கும். சமீபகாலமாக எந்த பட விழாவாக இருந்தாலும் மிஸ்கினை தவறாமல் அழைத்து விடுகிறார்கள்.

இதற்கு காரணம் அவர் பிரபல இயக்குனர் என்பதை தாண்டியும் அவர் மேடையில் பேசும் பேச்சு தான் இணையத்தில் வைரலாகி பரவுகிறது. இதுவே படத்திற்கு ப்ரோமோஷனாக அமைந்து விடுவதால் சிறப்பு விருந்தினராக மிஸ்கினை அழைக்கின்றனர். அவ்வாறு சமீபத்திய விழாவில் அவர் பேசிய விஷயம் இப்போது மிகப்பெரிய பேசு பொருளாக மாறி உள்ளது.

Also Read : தளபதி 67ன் அடுத்த கட்ட வேலையை ஆரம்பித்த லோகேஷ் கனகராஜ்.. சுடச்சுட அப்டேட் கொடுத்த இயக்குனர் மிஸ்கின்

அதாவது சமீபத்தில் டைனோசர் என்ற படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடந்தது. இதில் பேசிய மிஸ்கின் ஒரு இயக்குனர் தன்னை சந்தித்ததாகவும், அவர் உதடு கருப்பாக இருந்ததை தான் கவனித்ததாகவும் கூறியுள்ளார். இதில் இருந்து அவர் ஒரு நாளைக்கு 100 சிகரெடுக்கு மேல் குடிப்பார் என்பது எனக்கு தெரிய வந்தது.

ஒரு நல்ல படைப்பாளியாக இருந்தால் இதுபோல் கெட்ட பழக்கம் இருக்கும். நான் அஞ்சாதே படம் எடுக்கும்போது ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 120 சிகரெட் மேல் அடிப்பேன் என்று கூறியுள்ளார். அதுமட்டும்இன்றி அநாகரிகமாக சில கெட்ட வார்த்தைகளையும் பேசி இருந்த கொஞ்சநஞ்ச மானத்தையும் கெடுத்துக்கொண்டார்.

Also Read : அனைத்து இயக்குனர்களும் கேவலமாக பேசும் மிஸ்கின்.. தற்போது ஒரு இயக்குனரை புகழ்ந்து பேசியிருக்கிறார்.!

அதுமட்டும்இன்றி 10 மணிக்கு மேல் தண்ணி அடிக்க வேண்டும், புகை பிடிக்க வேண்டும் என ரசிகர்களுக்கு தவறான பாடத்தை கற்பித்து வருகிறார். இதில் கேலிக்கூத்து என்னவென்றால் மிஸ்கின் பேசும் கெட்ட வார்த்தைகளை கேட்டு ரசிகர்கள் கைதட்டி சிரிப்பது தான் அவலம். இது போன்ற இவர்கள் செய்வதால் தான் இதுவும் போன்றவர்களுக்கு இன்னும் எவ்வளவு வேணாலும் பேசலாம் என்ற எண்ணம் தோன்றுகிறது.

தன்னுடைய படங்களில் சைக்கோ கதாபாத்திரங்களை எடுத்து வரும் மிஸ்கின் நிஜத்திலும் சைக்கோ தான் என சிலர் விமர்சித்து வருகிறார்கள். மேலும் மிஸ்கின் இவ்வாறு மேடையில் அநாகரிகமாக பேசியதற்கு சினிமா பிரபலங்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

Also Read : ரொமான்டிக் ஹீரோவாக இருந்து வில்லனாக மாறிய 10 நடிகர்கள்.. சாக்லேட் பாய் நடிகர்களை கொடூரமாக காட்டிய மிஸ்கின்

Trending News