சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

சாமி காலில் விழுந்தால் எதுவும் கிடைக்காது.. மேடையில் சர்ச்சையை கிளப்பிய மிஸ்கின்

இயக்குனர் மதிமாறன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ், வர்ஷா பொல்லம்மா, கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் செல்ஃபி. இப்படத்தை கலைபுலி எஸ் தாணு வெளியிடுகிறார். செல்ஃபி படத்தின் இயக்குனர் மதிமாறன், இயக்குனர் வெற்றிமாறன் படங்களில் அசிஸ்டன்ட் டைரக்டராக பணியாற்றியுள்ளார்.

வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான ஆடுகளம் படத்தில் மதிமாறன் பணியாற்றியுள்ளார். வெற்றிமாறனின் அசுரன் படத்திற்கும் மதிமாறன் திரைக்கதை எழுதியிருந்தார். இந்நிலையில் செல்ஃபி படத்தின் இசை மற்றும் போஸ்டர் வெளியீடு விழா அண்மையில் நடைபெற்றது. இதில் இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் மிஸ்கின் ஆகியோர் பங்கு பெற்றனர்.

வெற்றிமாறன் பேசுகையில் மதிமாறன் தன்னுடைய சொந்தக்காரர்தான். மதிமாறனின் அப்பா தானே எனக்கு பெயர் வைத்தார். மதிமாறன் தன்னுடைய சொந்தக்காரர் என்பதால் தன்னுடன் சேர்த்துகாமல் இருந்தேன். ஆனால் அவருடைய திறமை பார்த்து அதன் பிறகு தன்னுடைய படங்களில் சேர்த்துக் கொண்டேன் என வெற்றிமாறன் கூறினார்.

அதன்பிறகு மிஸ்கின் பேசுகையில், என் நண்பன் வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய மதிமாறனுக்கு அங்கீகாரம் கிடைக்கும் மேடை இது. மதிமாறன் முகத்தில் அந்த வெற்றி தெரிகிறது. தற்போது தமிழ் சினிமாவில் வெற்றிமாறன் பல ஹட் படங்களை கொடுத்து வருகிறார்.

அவருடைய பட்டறையில் இருந்து வந்த மதிமாறனும் வெற்றிப் படங்களை கொடுப்பார் என்பதில் சந்தேகமில்லை. மேலும், சாமி காலில் விழுந்தால் எதுவும் கிடைக்காது ஆனால் நல்ல சினிமா எடுப்பவர்கள் காலில் விழுந்தால் நல்ல சினிமா கிடைக்கும் என கூறினார். மேலும் மதிமாறன் நல்ல கதை உள்ள படத்தை எடுத்தால் கண்டிப்பாக அவர் காலில் விழுவேன் என மிஷ்கின் கூறினார்.

மிஸ்கின் தற்போது ஆண்ட்ரியா மற்றும் விஜய் சேதுபதியை வைத்து பிசாசு 2 படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. பிசாசு படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.

சாமி காலில் விழுந்தால் ஒன்றும் கிடைக்காது என்பது போன்ற சர்ச்சை பேச்சு மேடையில் பேசுவது சரிதானா. இதையும் ஒருபுறம் சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகின்றனர்.

Trending News