MyVoteFor_JosephVijay.. சும்மா இருந்தவங்கள சொறிஞ்சு விட்ட போஸ் மாமா, பலம் கூடும் TVK

Bose Venkat-Vijay: ஒரு விஷயத்தை கண்டுக்காம விட்டா தானாவே அடங்கி போய்டும். ஆனால் இந்த சூட்சுமம் பலருக்கு தெரிவதில்லை. அப்படித்தான் இருக்கிறது விஜய்யின் அரசியல் வருகையும் பதட்டமடையும் அரசியல் களமும்.

ஆளும் கட்சிக்கு ஆதரவாக பேசி வரும் போஸ் வெங்கட் தற்போது விஜய்க்கு எதிராக பேசியிருக்கிறார். அதுவும் ஜோசப் விஜய் அவர்களே என அவர் பேசியது தற்போது ட்ரெண்டிங்கில் உள்ளது.

ஏற்கனவே மத்திய மாநில ஆளும் கட்சிகள் கெட் அவுட் மோடி, கெட் அவுட் ஸ்டாலின் என ஹாஷ் டாக் போட்டு ட்ரெண்ட் செய்து வந்தனர். உடனே விஜய் கட்சியினர் TVKForTN என குறுக்க புகுந்து சம்பவம் செய்தனர்.

பலம் கூடும் TVK

அப்படித்தான் தற்போது MyVoteFor_JosephVijay என ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இது போஸ் மாமாவுக்கு கொடுக்கும் பதிலடி. நேரத்துக்கு ஏத்த மாதிரி மாத்தி மாத்தி பேசுற உங்களுக்கு வடிவேலு நிலைதான்.

அடுத்த வருஷம் தேர்தல்ல எங்க பவர் என்னன்னு தெரியும். உங்களோட இந்த புலம்பல் தான் எங்களுக்கு கிடைச்ச வெற்றி.

ஆளும் கட்சிக்கு தோல்வி பயம் வந்துருச்சு. லெட்டர் பேட் கட்சி, பனையூர் பண்ணையார், வொர்க் பிரம் ஹோம் வேலை பார்க்கிறார் என நக்கல் அடிச்சவங்கள புலம்ப விட்டாச்சு.

இப்படியாக சோசியல் மீடியா அலப்பறை அனல் பறக்கிறது. மேலும் இப்படி தொடர்ந்து எதிர்ப்புகள் வருவதே விஜய்க்கு கூடுதல் பலமாக மாறி இருக்கிறது என்பதும் பொதுவான கருத்தாக இருக்கிறது.

1 thought on “MyVoteFor_JosephVijay.. சும்மா இருந்தவங்கள சொறிஞ்சு விட்ட போஸ் மாமா, பலம் கூடும் TVK”

Leave a Comment