செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

ரீ என்ட்ரியில் மண்ணை கவ்விய வடிவேலுவின் வசூல்.. இதுக்கு ரெட் கார்டே போட்டு இருக்கலாம்

வைகைப்புயல் வடிவேலுக்கு சில காலம் சினிமாவில் நடிக்க ரெட் கார்ட் தடை விதிக்கப்பட்டது. இவரது காமெடிக்காக ரசிகர்கள் ஏங்கி கிடந்த நிலையில் இப்போது தடை நீங்கி மீண்டும் படங்களில் நடித்து வருகிறார். ஆகையால் வடிவேலு கைவசம் எக்கச்சக்க படங்கள் உள்ளது.

அந்த வகையில் உதயநிதியின் மாமன்னன், லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வரும் சந்திரமுகி 2 மற்றும் பல படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வந்த வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டன்ஸ் படம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

Also Read : வடிவேலுவின் 5 வருட கனவை காலி செய்த இயக்குனர்.. நாய் சேகர் ரிட்டன்ஸ் முழு விமர்சனம்

சுராஜ் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் பிக் பாஸ் ஷிவானி, ஆனந்த்ராஜ், மனோபாலா மற்றும் பலர் நடித்திருந்தனர். மேலும் நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தில் ஒரு பாடலுக்காகவே பல கோடிகள் செலவு செய்திருந்தனர். அந்தப் பாடலை படமாக்க லண்டன் வரை சென்றது படக்குழு.

ஆனால் நாய் சேகர் ரிட்டன்ஸ் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. மேலும் இப்படம் வெளியாகும் போது மாண்டஸ் புயல் வலுப்பெற்றதால் திரையரங்குகள் வெறுச்சோடி காணப்பட்டது. இந்நிலையில் முதல் நாள் வசூலில் இப்படம் ஒரு கோடி மட்டுமே வசூல் செய்தது.

Also Read : நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் வடிவேலுவுக்கு ஒர்க்கவுட் ஆகுமா, ஆகாதா.? அனல் பறக்கும் ட்விட்டர் விமர்சனம்

மேலும் இரண்டாவது நாள் முடிவில் கிட்டத்தட்ட 1.1 கோடி வசூல் செய்திருந்தது. நேற்று மூன்றாவது நாள் மட்டும் 2 கோடி வசூல் செய்தது. மொத்தமாக நாய் சேகர் ரிட்டன்ஸ் படம் 4.1 கோடி வசூல் செய்தது. இது வடிவேலு மற்றும் நாய் சேகர் ரிட்டன்ஸ் படக்குழுவுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

வடிவேலு ரீஎன்ட்ரியல் கலக்குவார் என்று எதிர்பார்த்த நிலையில் போட்ட பணத்தை கூட எடுக்க முடியாமல் நாய் சேகர் ரிட்டன்ஸ் படக்குழுவினர் தவித்து வருகிறார்கள். இதற்கு பதிலாக வடிவேலுக்கு இன்னும் சில காலங்கள் ரெட் கார்டு போட்டிருக்கலாம் என்ற ரசிகர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர். மேலும் இது வடிவேலுக்கு மிகப்பெரிய சறுக்களை ஏற்படுத்தி உள்ளது. இனியாவது புதுவிதமான முயற்சிகள் செய்தால் மட்டுமே வடிவேலுவால் சினிமாவில் நிலைத்து நிற்க முடியும்.

Also Read : சூட்டிங் ஸ்பாட்டில் வடிவேலுவை அவமானப்படுத்திய நடிகை.. ரெட் கார்டு இல்லாமலேயே காலி செய்த வைகை புயல்

Trending News