புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

எவர்க்ரீன் ட்ரெண்ட் நடிகை ராணி.. நாட்டாமை டீச்சர் கலக்கிய 5 படங்கள்

நடிகை ராணி தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி படங்களில் நடித்திருக்கிறார். இவருக்கு ரக்சா என்னும் பெயரும் உண்டு. கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்குள் வந்த இவர் பின்னர் கவர்ச்சி நாயகியாகவும் ஆட்டம் போட்டிருக்கிறார். சினிமா மட்டுமில்லாமல் வம்சம், நந்தினி, சீதாராமன் போன்ற தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்திருக்கிறார். சமீபத்தில் இவருக்கு திரைப்படங்கள் எதுவும் இல்லை என்றாலும் இன்றுவரை சமூக வலைத்தளங்களில் டிரெண்டான நடிகை இவர்.

நாட்டாமை: இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் சரத்குமார், குஷ்பூ, மீனா, மன்சூர் அலிகான், மனோரமா போன்றவர்கள் நடித்த படம் நாட்டாமை. இந்த படம் வெளியாகி பல ஆண்டுகள் கழித்தும் படத்திற்கு எந்த அளவுக்கு வரவேற்பு இருக்கிறதோ அதே வரவேற்பு இந்த படத்தில் டீச்சராக நடித்த நடிகை ராணிக்கு உண்டு. இதில் சரத்குமார் மற்றும் ராணி வருகின்ற காட்சிகளில் பின்னணியில் இசைக்கப்பட்ட அந்த இசை இன்றுவரை சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆன ஒன்று.

Also Read:நாட்டாமை பட டீச்சரா இது.. இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா?

ஜெமினி: நாட்டாமை திரைப்படத்திற்கு பிறகு பல வருடங்கள் கழித்து மீண்டும் நடிகை ராணி ரசிகர்களிடையே ஜெமினி படத்தின் மூலம் பிரபலமானார். இதில் இவரும், நடிகர் விக்ரமும் சேர்ந்தாடும் ஓ போடு பாடல் மிகப்பெரிய ஹிட் அடித்தது. அதன் பின்னர் இவர் ஓ போடு ராணி என்றும் அழைக்கப்பட்டார். இந்தப் பாடலின் இன்று வரை ரசிகர்களிடையே வரவேற்பு பெற்று வரும் பாடல் தான்.

வில்லுப்பாட்டுக்காரன்: நடிகை ராணி முதன் முதலில் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமான படம் தான் வில்லுப்பாட்டுக்காரன். அப்போதைய வெற்றி நாயகன் ஆன ராமராஜனுக்கு ஜோடியாக இவர் நடித்திருந்தார். இதில் வரும் கலைவாணியோ என்னும் பாடலும் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்தது. இதில் ராணி தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.

Also Read:5 ரூபாய்க்கு கூட வழியில்லாமல் நடுரோட்டில் நின்ற சரத்குமார்.. காரணம் கேட்டா அதிர்ச்சி ஆயிடுவீங்க!

காதல் கோட்டை: இயக்குனர் அகத்தியன் இயக்கத்தில் நடிகர் அஜித் மற்றும் தேவயானி நடித்த பெரிய அளவில் வெற்றி அடைந்த படம் காதல் கோட்டை. இந்த படத்தில் ரயிலில் ‘வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா’ என்னும் பாடலில் நடன இயக்குனர் ராம்ஜி உடன், ராணி ஆடி இருப்பார். இந்தப் பாடல் மற்றும் நடனம் அப்போது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

வர்ணஜாலம்: ஸ்ரீகாந்த், சதா, குட்டி ராதிகா, நாசர், சரண்யா பொன்வண்ணன், ரியாஸ் கான், நிழல்கள் ரவி ஆகியோர் நடித்த படம் வர்ணஜாலம். அதிகாரியால் தன்னுடைய காதலி மீது சுமத்தப்படும் வீண் பழிக்காக அவரை பழி வாங்க போராடும் ஹீரோவின் கதை தான் இந்த திரைப்படம். இந்த படத்திலும் நடிகை ராணி சிறப்பாக நடித்திருப்பார்.

Also Read:90-களில் கேஎஸ் ரவிக்குமார், சரத்குமாருக்கும் ஏற்பட்ட கடும் சண்டை.. டூப் போட்டே படத்தை முடித்த கொடுமை

 

Trending News