திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

சமந்தாவை பழிவாங்க துடிக்கும் நாகசைதன்யா.. 2வதாக செய்யப்போகும் படுபாதக செயல்

சினிமாவின் நட்சத்திர தம்பதிகளாக ஜொலித்துக் கொண்டிருந்த தெலுங்கு நடிகர் நாக சைதன்யா-சமந்தா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டு நான்கு வருடங்களாக கணவன் மனைவியாக வாழ்ந்த நிலையில், சமீபத்தில் விவாகரத்து பெறுவதாக சமூக வலைதளங்களில் இவர்கள் போட்ட பதிவு அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்தது.

ஆனால் ரசிகர்கள் பலரும் இவர்கள் இருவரும் ஒன்று சேர்வார்கள் என எதிர்பார்த்தனர் ஆனால் கடைசிவரை இவர்கள் இருவரும் ஒன்று சேர்வதாக தெரியவில்லை. தற்போது நாகசைதன்யா இரண்டாவது திருமணத்திற்கு தயாராக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆனால் அவர் திருமணம் செய்து கொள்ளும் பெண் ஒரு நடிகை கிடையாது எனவும், சினிமா துறைக்கும் அவருக்கும் சம்பந்தம் இல்லாத ஒருவரைத்தான் திருமணம் செய்ய இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்தால் நன்றாக இருக்கும் என பலரும் கூறி வருகின்றனர். இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வராத நிலையில் கூடிய விரைவில் இந்த செய்தி உண்மையா இல்லையா என்பதை நாகசைதன்யா தரப்பிலிருந்து அறிவிக்கப்படவுள்ளது.

ஆனால் சமந்தா இதைப்பற்றி பெரிதாக எடுத்துக் கொள்வதாக தெரியவில்லை. ஏனென்றால் விவாகரத்து பெற போகிறேன் என்பதை அறிவித்த பிறகுதான் சினிமாவில் சமந்தா, சுதந்திரமாக பல படங்களில் அடுத்தடுத்து கமிட்டாகி நடிக்கத் தொடங்கி விட்டார். குறிப்பாக விவாகரத்துக்குப் பின்னரே சமந்தா மகிழ்ச்சியில் இருக்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது.

இவ்வாறு முழு நேரமும் தன்னை பிஸியாக வைத்துக் கொண்டிருக்கும் சமந்தா, ஒருவேளை நாக சைதன்யாவிற்கு இரண்டாவது திருமணம் நடந்தால் அதை சகஜமாக எடுத்துக் கொண்டு அந்த திருமணத்திற்கு சென்று வாழ்த்து சொல்லும் நிலைமையில் தான் சமந்தா இருக்கிறார்.

Trending News