வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

புருஷனிடம் போட்டுக் கொடுத்த எட்டப்பன்.. நீண்ட நாளுக்கு பின் கழட்டி விட்ட சமந்தா

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து நான்கு ஆண்டுகள் பின் கடந்த 2021ஆம் ஆண்டு விவாகரத்து செய்து தற்போது தனியாக வாழ்ந்து வருகிறார். சைத்யானவுடனான தன்னுடைய எல்லா தொடர்புகளையும் முறித்தி வந்துள்ள சமந்தா தற்போது மற்றோரு தொடர்பையும் முறித்துள்ளார்.

தமிழில் அறிமுகமான மாஸ்கோவின் காவேரி படம் முதல் தற்போது வரை அவரின் மேனேஜராக பணியாற்றி வந்தவர் மனோகர் என்பவர். நடிகர் நாக சைதன்யாவுக்கும் இவரே மேனேஜர் ஆவர். விவாகரத்துக்கு பின்னும் இவருக்கும் மனோகரே மேனேஜராக தொடர்ந்துள்ளார்.

விவாகரத்துக்கு பின் இவருக்கும் பணியாற்றும் மனோகர் தன்னுடைய தற்போதைய தனிப்பட்ட வாழ்க்கையில் நடக்கும் விஷயங்களை நாக சைதன்யாவிடம் பகிர்ந்து கொள்ளக்கூடும் என்பதால் அதிரடியாக அவரை மாற்றியுள்ளார். பழைய மேனேஜர் ஏதாவது எட்டப்பன் வேலை பார்க்க நேரிடும், அதனால் முன்னெச்சரிக்கையாக சில விஷயங்களை தடுத்துள்ளார் சமந்தா.

சைதன்யாவுடன் பணியாற்றுபவரை மேலாளராக பகிர்ந்து கொள்ள அவர் விரும்பவில்லை. மேலும் பாலிவுட் பக்கமும் தன்னுடைய கவனத்தை திருப்பியுள்ள சமந்தா, அங்கு காலூன்ற பாலிவுட்டில் இருப்பவர் தான் சரியாக இருப்பார் என்பதாலும் மனோகரை மாற்றியுள்ளார்.

எனவே, அவர் தனது தெலுங்கு பட பணிகளையும் கவனிக்க புதிய மும்பை மேலாளர் ஒருவரிடம் ஒப்படைத்துள்ளார். சமீபத்தில்கூட சமந்தா மும்பையில் ஒரு பெரிய பங்களா வாங்கி இருந்தார். சமந்தா தற்போது பெரும்பாலான விளம்பரங்களில் நடித்து வருவதற்கும் இந்த மேலாளரே காரணமாக கூறப்படுகிறார்.

தன்னுடைய இன்ஸ்டாகிராமில் சைதன்யாவை பின் தொடர்வதை நிறுத்தியுள்ள சமந்தா விவாகரத்துக்கு பின் முதல் முறையாக அவரை பற்றி பதிவிட்டுள்ளார். சமந்தா, நாக சைதன்யா நடிப்பில் வெளிவந்த மஜிலி படம் வெளியாகி மூன்று ஆண்டுகள் நிறைவடைந்ததை நிறைவு கூறும் வகையில் அவர் பதிவிட்டுள்ளார். தற்போது சமந்தா காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும் சகுந்தலா என்னும் தெலுங்குப் படத்தில் நடித்து வருகிறார்.

Trending News