வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

இடிச்ச பச்சரிசி, புடிச்ச மாவிளக்கு.. எதுக்கு இவ்வளவு ஆர்ப்பாட்டம் என்று உமிழும் சமந்தா ரசிகர்கள்

சமந்தாவும், நாக சைதன்யாவும் காதலித்து திருமணம் செய்துகொண்ட சூழலில் சில வருடங்களுக்கு முன்பு விவாகரத்து பெற்றனர். அதற்கு பிறகு இருவரும் தங்களது பாதையில் பயணித்துக்கொண்டிருக்கும் சூழலில் சைதன்யா இப்போது சோபிதா துலிபாலாவை திருமணம் செய்யவிருக்கிறார். மிக விரைவில் அவர்களுக்கு திருமணம் நடக்கவிருக்கிறது.

தற்போது, பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யா மற்றும் நடிகை ஷோபிதா துலிபாலாவின் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்கள் துவங்கி விட்டது. தெலுங்கு பாரம்பரிய முறைப்படி, பாரம்பரிய பசப்பு தாட்சணம் அதாவது மஞ்சள் இடித்து பூசும் விழாவுடன் அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளன.

தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் சமந்தா ரசிகர்கள் வயிற்றெரிச்சலுடன் சாபம் விட்டு வருகின்றனர்.

இதை சமந்தாவே விரும்பமாட்டார்

நாக சைதன்யாவுக்கும் ஷோபிதா துலிபாலாவுக்கும் கடந்த ஆகஸ்ட் மாதம், அவரது இல்லத்தில் நிச்சயதார்த்தம் நடந்தது. மேலும், நிச்சயதார்த்தத்தை குறித்து நாக சைதன்யாவின் தந்தை நாகர்ஜூனா அக்கினேனி அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தார்.

மேலும் தற்போது திருமண விழாக்கள் பாரம்பரிய முறை படி ஆரம்பித்துள்ளது. அந்த நிகழ்வில், தம்பதிகள் கோதுமை, மஞ்சள் மற்றும் மற்ற சில மங்கள பொருட்களை ஒன்றாக உலக்கையில் இடித்து, உரலில் அரைப்பார்கள். நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் இந்த சடங்கு நடைபெற்ற நிலையில், தற்போது பிரபலங்கள் அனைவரும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், சமந்தா ரசிகர்கள் புகைச்சலுடன் இருக்கிறார்கள்.

மேலும் சமந்தா எப்படி ரியாக்ட் பண்ணுவார் என்று எல்லோருமே ஆர்வமாக காத்திருக்கின்றனர்.

Trending News