கண்களை மூடிக்கிட்டு கஜானாவை காலி பண்ணிய நாகார்ஜுனா.. ரஜினியை வைத்து போட்ட தூண்டில்

ஒரு பக்கம் அமீர்கான, மறுபக்கம் நாகார்ஜுனா என இரண்டு பேரும் கூலி படத்திற்கு இப்பவே ப்ரமோசன்களை ஆரம்பித்து விட்டார்கள். எல்லாத்துக்கும் மேல ஒரு படி மேலே சென்ற அமீர் கான், லோகேஷ் கனகராஜ் அருமையான இயக்குனர், இப்படி ஒரு டேலண்ட் இருக்கும் நபரை பார்ப்பது அபூர்வமென துதி பாடி வருகிறார்.

பொதுவா ஒரு பெரிய படத்தில் நடிக்கும் போது அந்தப் படத்தை பற்றிய செய்திகளை மிகவும் ரகசியமாக வைத்துக் கொள்வார்கள் ஆனால் அதற்கு நேர் மாறாக இவர்கள் இருவரும் பல ரகசியங்களை போட்டு உடைக்கிறார்கள், நாங்கள் படத்தில் இவ்வளவு நேரம் வருகிறோம், இந்த கதாபாத்திரம் செய்கிறோம் என வெளிப்படையாக சொல்கிறார்கள்.

இப்படி ஓப்பனாக பேசுவதால் படத்திற்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது என நம்புகிறார்கள். அந்த அளவிற்கு இந்த படத்தின் மீது கடும் நம்பிக்கை வைத்துள்ளனர். மூன்று சூப்பர் ஸ்டார்கள் மற்றும் லோகேஷ் கனகராஜ்
கூட்டணி என்பதால் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

ஆகஸ்ட் 14ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆக உள்ளது. எப்படியும் கமலின் விக்ரம் படம் அடித்த வசூலை முந்தியாக வேண்டும் என லோகேஷ் இதில் மும்மரம் காட்டி வருகிறார். ரஜினியும் தனது முந்தைய படமான ஜெயிலர் படத்தின் வசூலை முந்தனும், என கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறார்.

எல்லாவற்றிற்கும் மேலாக இந்த படத்தின் தெலுங்கு உரிமையை நாகார்ஜுனா மற்றும் சித்தாரா என்டர்டைன்மெண்ட்ஸ் வாங்கியுள்ளது. இதை சுமார் 43 கோடிகள் கொடுத்து கைவசப்படுத்தியுள்ளது. எப்படியும் இந்த படத்தை வைத்து கஜானாவை நிரப்பி விடலாம் என இப்பொழுதே சின்ன மீனை போட்டு சுறாவை எதிர்நோக்கி இருக்கிறார்கள்.

thenmozhi

Thenmozhi

தேன்மொழி - கடந்த 8 ஆண்டுகளாக சினிமா தொடர்பான செய்திகளை எழுதி வருகிறார். OTT செய்திகள் மற்றும் விமர்சனங்களில் ஆர்வம் கொண்டவர். உண்மையான மற்றும் பயனுள்ள தகவல்களை கொண்டு சேர்ப்பதே இவரின் குறிக்கோள்.

View all posts →