வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

வினோத கண்டிஷனுடன் அமலாவை திருமணம் செய்த நாகார்ஜுனா!. இதுல காதலே இல்லையே பாஸ்!

Nagarjuna: 90களின் காலகட்டத்தில் தென்னிந்திய சினிமா ரசிகர்களை தன்னுடைய அழகால் கிரங்கடித்தவர் தான் நடிகை அமலா. மாடன் டிரஸ் ஆக இருக்கட்டும், புடவையாக இருக்கட்டும் அப்படியே தேவதை போல் வந்து நிற்பார்.

அமலா டாப் ஹீரோயின் ஆக வளர்ந்து கொண்டிருந்தபோது அவரை திருமணம் செய்ய ஆசைப்பட்ட நடிகர்கள் பலர் இருக்கிறார்கள். இப்படி ஒட்டுமொத்த சினிமா உலகமும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிக் கொண்டிருந்த அமலா நாகார்ஜுனாவை காதல் செய்து திருமணம் செய்து கொண்டார்.

அதுவும் நாகார்ஜுனாவுக்கு அமலா இரண்டாவது மனைவி. நாகார்ஜுனா தன்னுடைய மனைவியுடன் வாழ்ந்து கொண்டிருந்தபோது அமலாவுடன் காதலா அதன்பின் பின்னர் விவாகரத்து ஆனதாக கூட செய்திகள் வெளியாகிறது.

ஆனால் அதில் துளி அளவும் உண்மை இல்லை எனவும் தன் மனைவியை பிரிந்த பிறகு தான் நாகார்ஜுனா அமலாவை காதலித்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் இந்த தம்பதியை பற்றி தெரியாத ஒரு விஷயத்தை நடிகை குட்டி பத்மினி தன்னுடைய யூடியூப் சேனலில் பகிர்ந்து இருக்கிறார்.

இதுல காதலே இல்லையே பாஸ்!

அமலாவின் ஆரம்ப காலகட்ட சினிமா வாழ்க்கையில் குட்டி பத்மினி அவருக்கு நெருங்கிய தோழியாக இருந்திருக்கிறார். இந்த நிலையில் நாகார்ஜுனா மற்றும் அமலா காதலித்து வந்திருக்கிறார்கள். இந்த நிலையில் நாகார்ஜுனா எந்த ஒரு தருணத்திலும் திருமணத்தைப் பற்றி வாயைத் திறக்காமலேயே தள்ளிப் போட்டு வந்திருக்கிறார்.

அந்த சமயத்தில் குட்டி பத்மினி கூட ஏன் இவர் திருமணத்தைப் பற்றி இதுவரை பேசாமல் இருக்கிறார் என அமலாவிடம் கேட்டிருக்கிறார். அப்போது அமலா நாகார்ஜுனா மேல் எனக்கு நம்பிக்கை இருக்கிறது, அவர் என்னை கைவிடமாட்டார் என சொல்லியிருக்கிறார்.

திடீரென ஒரு நாள் குட்டி பத்மினி இடம் வந்து நாகார்ஜுனா தன்னை திருமணம் செய்ய ஒத்துக்கொண்டார் என சொல்லி இருக்கிறார். அத்தோடு அவர் ஒரு வினோதமான கண்டிஷன் போட்டு அதற்கு சத்தியம் வாங்கிக் கொண்டுதான் திருமண விஷயம் பற்றி பேசி இருக்கிறார்.

அதாவது நீ இப்போ எப்படி இருக்கிறாயோ அதே மாதிரி தான் கல்யாணத்திற்கு அப்புறமும், குழந்தை பிறந்த பிறகும் இருக்க வேண்டும். எந்த சூழ்நிலையிலும் நீ குண்டாகவே கூடாது என ரொம்பவும் உறுதியாக பேசி சத்தியம் வாங்கிக் கொண்டாராம்.

காதலுக்கு உருவம் தேவையில்லை என இன்று வரை ஒரு நம்பிக்கை இருக்கும் பொழுது காலத்திற்கும் நீ கொஞ்சம் கூட வெயிட் போட்டு விடக்கூடாது என சத்தியம் வாங்கிக் கொண்டு திருமணம் செய்வதெல்லாம் என்ன கதை, இதில் காதலே இல்லையே என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Trending News