தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் அனைத்து காமெடி நடிகர்களுக்கும் போட்டியாக இருந்த ஒரே நடிகர் தான் நாகேஷ். ஏனென்றால் இவரது நடிப்பில் வெளியான அனைத்து படங்களும் இவரது காமெடி காட்சிகள் மட்டுமே ரசிகர்களிடம் பெரிதும் பேசப்பட்டது.
இவ்வளவு ஏன் ஒரு காலத்தில் எம்ஜிஆர் உட்பட பழைய கால முன்னணி நடிகர்கள் அனைவரும் அவரது படங்களில் நாகேஷ் நடிக்க வைக்க முன் வந்துள்ளனர்.
அப்படி சினிமாவில் கொடி கட்டிப் பறந்தவர் தான் நாகேஷ். இவரது நடிப்பில் வெளியான காமெடி காட்சிகள் அனைத்திலும் இவரது நடிப்பு இன்று வரை நிலைத்து நிற்கிறது. அந்த அளவிற்கு தனது காமெடி மூலம் மக்கள் மனதில் குடியேறியுள்ளார் நாகேஷ்.

ஆனால் நாகேஷ் ரயில்வே துறையில் கிளர்க் வேலையை முதலில் பார்த்துள்ளார். அதன் பிறகுதான் சினிமாவிற்கு வந்துள்ளார். 3 தலைமுறை நடிகருடன் நடித்த நாகேஷ் அனைத்து சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
நாகேஷ் ஒரு செயின் ஸ்மோக்கர் மற்றும் மது பழக்கம் உள்ளவர். இந்த இரண்டு தீய பழக்கங்களும் இருந்துள்ளன, இவருக்கு ஒரு சில மன அழுத்தம் காரணமாகத்தான் இந்த இரண்டு தீய பழக்கங்கள் இருந்துள்ளன.
ஆனால் தற்போது வரை இவரை ஏன் இந்த தீய பழக்கங்கள் இரண்டையும் ஏற்றுக்கொண்டார் என்பது பலருக்கும் புரியாத புதிராக தான் உள்ளது. பின்பு வாழ்க்கையில் பல சோகங்கள் நடந்ததால் நாகேஷ்விடம் உதவியாளராக பணியாற்றிய கே எஸ் ரவிக்குமார் அவருடைய பங்களா வாங்கும் நிலை ஏற்பட்டது. சினிமாவில் இவரது நடிப்பு என்றும் நிலைத்து நிற்கும்.