வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

அந்த நடிகையை பார்த்தாலே வெறுப்பா இருக்கு.. பாலச்சந்தர் படத்தில் நடிக்க மறுத்த நாகேஷ்

நாகேஷ், நடிப்பு ராட்சசன் என்று சொன்னால் மிகையாகாது. இன்றளவும் அவருடைய படங்களைப் பார்க்கும் பொழுது ரசிகர்கள் வயிறு குலுங்க சிரிக்கின்றனர். அந்தக் காலகட்டத்தில் நாகேஷ் கால்ஷீட்டுக்காக தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் என பலரும் அவர் வீட்டில் காத்திருப்பார்கள்.

நாகேஷின் கால்ஷீட் வாங்கிய பிறகுதான் ஹீரோ, ஹீரோயின்களின் கால்ஷீட்டை வாங்குவார்கள். அந்தளவுக்கு அப்போதைய காலகட்டத்தில் நாகேஷ் அவ்வளவு பிஸியாக இருந்தார். ஒரு நாளைக்கு 6 முதல் 7 படங்களுக்கான ஷூட்டிங் செல்வாராம்.

அப்போது நாகேஷுக்கு இணையாக பார்க்கப்பட்டவர் நடிகை மனோரமா. இவர்கள் இருவரும் இணைந்து ஏராளமான படங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில் பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான நவகிரகம் படத்தில் நாகேஷுக்கு ஜோடியாக மனோரமாவை ஒப்பந்தம் செய்திருந்தார்கள்.

ஆனால் அந்த நடிகை நடித்தால் நான் நடிக்க மாட்டேன் என நாகேஷ் மறுப்பு தெரிவித்துள்ளார். அதன்பிறகு லட்சுமி அந்த கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஏன் அப்போதைய காலகட்டத்தில் மனோரமாவுடன் நாகேஷ் நடிக்க மறுத்தார் என்றால் நாகேஷ் குடும்பம் ஒரு பிரச்சனையில் மாட்டி இருந்தது.

அந்தப் பிரச்சனை கோர்ட் வரை சென்றது. அதில் முக்கிய சாட்சியாக இருந்த மனோரமா நாகேஷுக்கு எதிராக சாட்சி கூறினார். மேலும் இந்த மன அழுத்தம் காரணமாக நாகேஷின் மனைவி ரெஜினா சில நாட்களிலேயே மரணமடைந்தார். இதனாலேயே மனோரமா மீது நாகேஷ் வெறுப்பில் இருந்தார்.

நாகேஷின் நண்பர் மற்றும் அப்போதைய முதலமைச்சர் எம்ஜிஆரால் அந்த வழக்கு முடிக்கப்பட்டது. அதன்பின்பு கிட்டத்தட்ட இருபத்தி ஏழு வருடங்கள் கழித்து வடிவேலு கதாநாயகனாக நடித்த 23ம் புலிகேசி படத்தில் நாகேஷ் மற்றும் மனோரமா இருவரும் இணைந்து நடித்திருந்தனர். அதன்பிறகு சில வருடங்கள் கழித்து ஒரு விழா மேடையில் நாகேஷ் மற்றும் மனோரமா இருவரும் அருகில் அமர்ந்து இருந்தனர்.

Trending News