திங்கட்கிழமை, ஜனவரி 6, 2025

ஈசிஆர் பங்களா, லிவிங் ரிலேஷன்ஷிப் என நக்மா வாழ்ந்த வாழ்க்கை.. 4 பேரால் திருமணத்திற்கு போட்ட எண்ட் கார்டு

Nagma: 90 கால கட்ட சினிமாவில் தவிர்க்க முடியாத நாயகியாக இருந்த நக்மா திடீரென காணாமல் போனவர்கள் பட்டியலில் இணைந்தார். போஜ்புரி படங்களில் நடித்த இவர் அரசியலிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். இப்படி லைம் லைட்டில் இருக்கும் இவருக்கு தற்போது 49 வயது ஆகிறது.

ஆனால் இன்னும் இவர் திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாக தான் இருக்கிறார். இதற்கு முக்கிய காரணம் அவருடைய வாழ்வில் நடந்த பல சம்பவங்கள் தான். அதில் நான்கு பிரபலங்களுடன் இவர் கிசுகிசுக்கப்பட்ட கதையும் இதற்கு ஒரு காரணம் என்று சொல்லலாம்.

அதன்படி நடிகர் சரத்குமாருடன் இவர் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்ததாக அப்போதைய பத்திரிகைகள் பரபரப்பு செய்தியை வெளியிட்டது. அது மட்டுமல்லாமல் ஈசிஆரில் ஆடம்பர பங்களாவில் இவர்கள் சேர்ந்து வசித்ததாக பல பத்திரிக்கையாளர்கள் ஆணித்தரமாக கூறுகின்றனர்.

Also read: 49 வயதில் நக்மாவிற்கு வந்த கல்யாண ஆசை.. பாட்ஷாவின் காதலிக்கு இருந்த நிஜமான 4 எக்ஸ் காதலர்கள்

சில மன வருத்தத்தின் காரணமாக நக்மா சரத்குமாரை பிரிந்து இருக்கிறார். அதேபோல் கிரிக்கெட் வீரர் கங்குலியுடன் இவர் காதலில் இருப்பதாகவும் செய்திகள் கிளம்பியது. ஆனால் அதுவும் பிரேக்கப்பில் முடிந்திருக்கிறது.

மேலும் நக்மா தமிழில் பிரபுதேவா உடன் தான் அறிமுகமானார். அதை அடுத்து இவர்கள் இருவரும் சில படங்களில் ஜோடி சேர்ந்திருக்கின்றனர். அதனாலேயே இவர்களைப் பற்றிய கிசுகிசுவும் அப்போது பெரிய அளவில் பேசப்பட்டிருக்கிறது.

அதேபோல் கார்த்திக்குடன் இவர் மேட்டுக்குடி, பிஸ்தா உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். அந்த படங்களில் இவர்தான் தனக்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என்று கார்த்திக் அடம் பிடித்தாராம். அந்த அளவுக்கு இவர்களுக்குள் ஒரு நட்பு இருந்திருக்கிறது. இப்படி நக்மாவை சுற்றி நடந்த பல சம்பவங்கள் தான் அவர் இன்று வரை திருமணத்தை வெறுப்பதற்கு காரணமாக சொல்லப்படுகிறது.

Also read: ஒன்னுக்கு ஒன்னு சலிச்சது இல்ல போட்டி போட்டு நடித்த 5 அக்கா தங்கை நடிகைகள்.. நக்மாவை ஓரமாக உட்கார வைத்த ஜோ

Trending News