வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

நாய் சேகர் ரிட்டன்ஸால் தலையில் துண்டை போட்ட தயாரிப்பாளர்.. சிரிப்பாய் சிரிக்கும் முதல் நாள் வசூல்

சுராஜ் இயக்கத்தில் வடிவேலு ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு நடித்திருக்கும் திரைப்படம் நாய் சேகர் ரிட்டன்ஸ். மிக பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த இந்த திரைப்படம் நேற்று வெளியானது. பல வருடங்களுக்குப் பிறகு வைகைப் புயலின் நான் ஸ்டாப் காமெடியை ரசிக்க ஆடியன்ஸ் மிகவும் ஆவலாக இருந்தனர். அவர்களின் அந்த எதிர்பார்ப்பை வடிவேலு பூர்த்தி செய்தாரா என்று கேட்டால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

அந்த அளவுக்கு படம் ரசிகர்களை ஏமாற்றி இருக்கிறது. படத்தைப் பார்த்த பலரும் இப்படி ஒரு கதையை வடிவேலு எதற்காக தேர்ந்தெடுத்து நடித்தார் என அதிர்ச்சியும், ஆச்சரியமும் கலந்து பேசி வருகின்றனர். மேலும் ரசிகர்கள் வடிவேலுவிடம் என்ன எதிர்பார்த்து சென்றார்களோ அந்த நகைச்சுவை படத்தில் மிகவும் குறைவாகவே இருக்கிறது.

Also read: வடிவேலுவின் 5 வருட கனவை காலி செய்த இயக்குனர்.. நாய் சேகர் ரிட்டன்ஸ் முழு விமர்சனம்

அது மட்டுமல்லாமல் படத்தில் பல கதாபாத்திரங்கள் எதற்கு என்று தெரியாமலே இருக்கின்றனர். அதிலும் இத்தனை கேரக்டர்கள் இருந்தும் வடிவேலு மட்டுமே அதிக காட்சிகளில் தெரிவது பார்ப்பவர்களுக்கு சுவாரசியத்தை குறைக்கின்றது. இயக்குனர் எதை நினைத்து இப்படி ஒரு கதையை அமைத்தாரோ தெரியவில்லை. ஆனால் இந்த படத்தில் அவர் என்ன சொல்ல வருகிறார் என்பது மட்டும் கடைசி வரையில் யாருக்கும் புரியவில்லை என்பதுதான் உண்மை.

இப்படி பல பின்னடைவுகள் இருப்பதால் இப்படத்திற்கு தற்போது வரவேற்பு குறைந்துள்ளது. அந்த வகையில் முதல் நாளிலேயே இப்படத்தை பார்க்க ரசிகர்கள் பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை. அதனால் தியேட்டர்களில் பல காட்சிகள் காத்து வாங்கிய நிலையில் தான் ஓடி இருக்கிறது. இதனால் தயாரிப்பாளர் தற்போது தலையில் துண்டை போடும் நிலைக்கு வந்திருக்கிறார்.

Also read: நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் வடிவேலுவுக்கு ஒர்க்கவுட் ஆகுமா, ஆகாதா.? அனல் பறக்கும் ட்விட்டர் விமர்சனம்

அந்த வகையில் இந்த திரைப்படம் 20 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இப்போது வரும் விமர்சனங்களை பார்க்கும் போது போட்ட பணத்தில் பாதி கூட தயாரிப்பாளருக்கு கிடைக்காது என்று தெரிகிறது. அதன் அடிப்படையில் நேற்று இப்படத்தின் முதல் நாள் வசூல் தமிழ்நாட்டில் 1.5 கோடியாக இருக்கிறது. வடிவேலுவின் மீதுள்ள நம்பிக்கையால் ரசிகர்கள் முன்கூட்டியே டிக்கெட் புக் செய்ததால் மட்டுமே இந்த வசூல் கிடைத்துள்ளது.

இன்று இப்படத்திற்கு எதிர்பார்த்த அளவு கூட்டம் வரவில்லை. மேலும் மழையின் தாக்கம் அதிகரித்து இருப்பதும் ஒரு காரணம். இருப்பினும் இது நாள் வரை நம் மனதிற்கு நெருக்கமாக இருந்த வடிவேலுவின் காமெடி இந்த நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்தில் மிஸ் ஆகி இருக்கிறது. அந்த வகையில் இப்படத்தின் மூலம் வடிவேலுவின் நிலைமை சிரிப்பாய் சிரிக்கிறது.

Also read: யோகி பாபுவின் மார்க்கெட்டை இறக்க நடக்கும் சதி.. பின்னால் இருந்து சைலண்டாக வேலை பார்க்கும் நடிகர்

Trending News