ஐந்து வருடங்களுக்கு பிறகு வடிவேலு நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்திருக்கிறார். சுராஜ் இயக்கத்தில் சிவாங்கி, ஆனந்த்ராஜ், மனோபாலா, ஷிவானி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். ஏற்கனவே இதன் ட்ரெய்லர் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில் இன்று இப்படம் வெளியாகி இருக்கிறது.
தற்போது படத்தை பார்த்த ரசிகர்கள் தங்களுடைய விமர்சனங்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகின்றனர். அதில் பெரும்பாலான ரசிகர்கள் வடிவேலுவின் நடிப்பை பாராட்டி இருக்கின்றனர். நாய்களை கடத்துபவராக வரும் அவரின் நடிப்பு படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
Also read: சூட்டிங் ஸ்பாட்டில் வடிவேலுவை அவமானப்படுத்திய நடிகை.. ரெட் கார்டு இல்லாமலேயே காலி செய்த வைகை புயல்
அவருக்கு அடுத்தபடியாக ஆனந்தராஜின் கதாபாத்திரமும் ரசிகர்களை பெருமளவு கவர்ந்துள்ளது. அந்த வகையில் குழந்தைகளும், குடும்ப ஆடியன்சும் பார்க்கும் வகையில் இந்த திரைப்படம் இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். இப்படி படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் வந்தாலும் ஒரு சில ரசிகர்கள் ஏமாற்றமும் அடைந்திருக்கின்றனர்.
அதாவது வடிவேலுவின் ரசிகர்களுக்கு இந்த திரைப்படம் பெரிய அளவில் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. அதிலும் சில காமெடி காட்சிகளை தவிர பல வசனங்கள் ரசிகர்களை கவர தவறிவிட்டது. அந்த வகையில் வடிவேலுவிடம் பயங்கர அலப்பறையை எதிர்பார்த்து வந்த ரசிகர்களை அவர் கொஞ்சம் ஏமாற்றி இருக்கிறார்.
Also read: யோகி பாபுவின் மார்க்கெட்டை இறக்க நடக்கும் சதி.. பின்னால் இருந்து சைலண்டாக வேலை பார்க்கும் நடிகர்
அதிலும் சில ரசிகர்கள் வடிவே மற்ற ஹீரோக்களின் திரைப்படங்களில் நடிக்கும் போது அதிக அளவில் ஸ்கோர் செய்வார். அதுவே அவர் ஹீரோவாக நடித்திருக்கும் இந்த திரைப்படத்தில் ஆனந்தராஜ் உள்ளிட்ட மற்ற நடிகர்கள் அதிக அளவில் ஸ்கோர் செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் விஜய் டிவியின் புகழ் சிவாங்கி இந்த திரைப்படத்தில் ஒரு செட் ப்ராப்பர்ட்டி போல் வந்து செல்வதாகவும் ரசிகர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஏற்கனவே டான் திரைப்படத்தில் நடித்திருந்த இவர் இந்த படத்தில் நடித்திருப்பது பற்றி பெரிய அளவில் பேசி வந்தது குறிப்பிடத்தக்கது. ஆக மொத்தம் இந்த நாய் சேகர் ரிட்டன்ஸ் வடிவேலுவை சறுக்கி விட்டுள்ளது.
Also read: வடிவேலு, விவேக் படங்களில் நடித்த காமெடி நடிகர்.. திடீர் மறைவால் அதிர்ச்சியில் உறைந்த கோலிவுட்