வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த நக்கல் மன்னன்.. ஊரையே வளைத்துப் போடும் மொத்த சொத்தின் மதிப்பு

பொதுவாக எந்த மாதிரி படங்களாக இருந்தாலும் அதில் முக்கியமாக நாம் அனைவரும் ரசித்துப் பார்ப்பது நகைச்சுவை தான். இதை ரசிப்பதற்காக ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். நம்மளுடைய கவலைகளை மறக்கடிக்கும் விதமாக இருப்பது நகைச்சுவை. இதை நம்மளுக்கு முக்கால்வாசி சினிமாவில் கொடுத்து வந்துகிட்டு இருந்தவர் தான் நக்கல் மன்னன் கவுண்டமணி.

இவர் காமெடிகளை பார்த்து நம்முடைய கவலைகளை மறந்து மகிழ்ச்சியுடன் இருந்திருக்கிறோம். இப்பொழுதும் இவருடைய காமெடிகளை பார்க்கும் பொழுது வாய்விட்டு மனதார சிரிக்க தோன்றும் அளவிற்கு இருக்கும். இவருடைய உண்மையான பெயர் சுப்பிரமணி. ஆனால் இவர் சினிமாவில் இருக்கும் பலரையும் கவுண்டர் கொடுத்து கலாய்ப்பதில் மன்னன் என்ற பெயரை வாங்கியதால் கவுண்டமணி என்று இவருக்கு பெயர் வந்தது.

Also read: கவுண்டமணி வில்லனாக மிரட்டிய 5 படங்கள்.. இன்றுவரை பிரபலமாக இருக்கும் ‘பத்தவச்சுட்டியே பரட்டை’ வசனம்

தொடர்ந்து 300 படங்களுக்கும் மேல் நடித்திருக்கிறார். அதிலும் இவரும் செந்திலும் சேர்ந்து அடிக்கும் லூட்டிகளை மறக்கவே முடியாது. ஏன் இன்னமும் கூட பல காமெடி சேனல்கள் இவருடைய காமெடியை போட்டு தான் அவர்களுடைய சேனல்களை வளர்த்து வருகிறார்கள். இவர்களுடைய காமெடிகளை பார்க்கும் பொழுது வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டுப் போகும் என்ற பழமொழிக்கு ஏற்ப இவர்களுடைய காமெடி நமக்கு மருந்தாக இருக்கும்.

அப்படிப்பட்ட இவர் வயது மூப்பின் காரணமாக சில ஆண்டுகளாக சினிமாவில் நடிக்க முடியாமல் போய்விட்டது. ஆனால் சமீபத்தில் மறுபடியும் ஹீரோவாக நடிப்பதற்கு கமிட்டாகி இருக்கிறார். அத்துடன் நடிகர் சிவகார்த்திகேயன் உடன் ஒரு படத்தில் அவருடைய பெரியப்பா கேரக்டரிலும் நடிக்கப்போவதாக தகவல் வெளியாகி வந்தன.

Also read: கவுண்டமணி ஜெயராம் காமெடியில் வெளிவந்த 5 படங்கள்.. சிறுசும் பெருசும் குஷ்பூ உடன் செஞ்ச ரகளை

மேலும் இவர், நாகேஷ் ஹீரோவாக நடித்து சர்வர் சுந்தரம் என்ற படத்தில் கார் டிரைவராக சின்ன ரோலில் நடித்து சினிமாவில் அறிமுகமானார். அதன் பின் பாரதிராஜா இயக்கத்தில் கமலஹாசன், ரஜினிகாந்த் நடித்த 16 வயதினிலே படத்தில் வில்லத்தனம் கலந்த நகைச்சுவையாக நடித்தார். அதன் பின் பல படங்களில் காமெடியனாகவும் நடித்து, ஹீரோவாகவும் நடித்து புகழ்பெற்றார்.

காமெடியன்களிலே நாகேஷ்க்கு பின் அதிக சம்பளம் வாங்கியவர் இவர் தான். சமீப காலமாக இவர் படங்களில் நடிக்காமல் இருந்தாலும் இவருடைய சொத்து மதிப்பு 50 கோடிக்கு மேல் சேர்த்து வைத்து செல்வ செழிப்புடன் இருந்து வாழ்ந்து வருகிறார். இதுபோக வயல், தோப்பு, நிலம் போன்ற ஏகப்பட்ட மதிப்பு மிகுந்த சொத்துக்களை வைத்து ஒரு ஊரே வளைத்து போடும் அளவிற்கு சேர்த்து வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also read: கவுண்டமணிக்காகவே செயல்பட்ட சென்சார் போர்டு.. அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தைக்கு போட்ட தடா

Trending News