தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்தவர் நடிகை நமீதா. ரசிகர்களை மச்சான்ஸ் என்று அன்புடன் அழைக்கும் இவர் பல திரைப்படங்களில் கவர்ச்சி கதாபாத்திரத்தில் நடித்து கலக்கி இருக்கிறார்.
மேலும் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் ஒன்றிலும் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் ஓவியாவுடன் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக இவர் சில சர்ச்சைகளையும் சந்தித்தார். அதன்பிறகு இவர் கடந்த 2017ஆம் ஆண்டு வீரேந்திர சௌத்ரி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பிறகு சினிமாவில் நடிக்காமல் குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டு வந்த நமீதாசில நாட்களுக்கு முன்பு தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை ரசிகர்களுக்கு தெரியப்படுத்தினார். இதைப்பார்த்த ரசிகர்கள் பலரும் அவருக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்நிலையில் நிறைமாதமாக இருக்கும் நமீதாவுக்கு கோலாகலமாக வளைகாப்பு நடைபெற்றது. இந்த வளைகாப்பு நிகழ்ச்சியில் பிக்பாஸ் ஆரவ், பூர்ணிமா பாக்யராஜ், ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்து கொண்டு அவரை ஆசீர்வதித்தனர்.
தாய்மையின் பூரிப்பில் இருக்கும் நமீதா அந்த நிகழ்ச்சியில் கொள்ளை அழகுடன் இருந்தார். மேலும் அவர் அந்த நிகழ்ச்சியில் தன்னுடைய குழந்தைக்காக ஒரு தாலாட்டு பாடலையும் பாடினார். சிறுத்தை படத்தில் வரும் ஆராரோ ஆரிரரோ என்ற பாடலை நமீதா தன் கொஞ்சும் தமிழில் பாடியது பலருக்கும் வியப்பாக இருந்தது.

இதை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு இவ்வளவு அழகாக பாட தெரியுமா என்று அவருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். மேலும் விரைவில் குழந்தைக்கு தாயாகப் போகும் நமிதாவிற்கு பிரசவம் நல்ல முறையில் நடக்க வேண்டும் என்று பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
