திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

கதிரை கதற கதற வச்சு செய்த நந்தினி.. ஜீவானந்தம் மாஸ் என்ட்ரியால் குணசேகரனுக்கு ஆப்பு

சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியல் தற்போது விறுவிறுப்பாகவும் எப்பொழுது மறுநாள் ஒன்பதரை மணி ஆகப் போகிறது என்று தோன்றும் அளவிற்கு எபிசோடுகள் இருக்கிறது. அதிலும் இத்தனை நாள் ஆவலாக காத்துக் கொண்டிருந்த ஜீவானந்தம் இந்த நாடகத்தின் இயக்குனர் திருச்செல்வம் தான் தெரிந்த பிறகு இன்னும் இண்டஸ்ட்ரிங்காக இருக்கிறது.

அதிலும் இவரின் மாஸ் என்டரி பார்க்கும் பொழுது மரண வெயிட்டிங் ஆக இருக்கிறது. முக்கியமாக தற்போது வருகிற எபிசோடை பார்க்கும் போது திரில்லர் நாடகத்தை பார்ப்பது போலவே இருக்கிறது. அடுத்து என்ன நடக்கும் என்று யாராலும் கண்டுபிடிக்க முடியாமல் கதை அமைந்து வருகிறது. குணசேகரனுக்கு ஜீவானந்தம் மூலமாக சரியான பதிலடி இருக்கிறது.

Also read: யார் அந்த ஜீவானந்தம் கண்டுபிடித்த ஜனனி.. சுக்கு நூறான குணசேகரனின் சொத்து கனவு

அதுவும் எப்படி எல்லாம் கனெக்சன் போகிறது என்றால் ஜனனி நண்பராக இருந்த கௌதம், எஸ் கே ஆர், மற்றும் அப்பத்தா இவர்களுக்கு எல்லாம் அந்த ஜீவானந்தம் யார். இவரை வைத்து அவர்களுக்கு என்ன நடக்க இருக்கிறது என்பதை யோசிக்கும் போது தலையை பிச்சுகிற அளவுக்கு கதை அமைந்து வருகிறது.

இனிமேல் தான் குணசேகரனின் கொட்டம் மொத்தமும் அடங்கப் போகிறது. முக்கியமாக கோலங்கள் நாடகத்தில் தேவயானிக்கு எப்படி ஒரு தோழனாக இருந்து வந்தாரோ அதேபோல் இந்த வீட்டின் மருமகள்களுக்கு இவர் மூலம் நல்வழி கிடைக்கப் போகிறது என்பது உறுதியாகிறது. அடுத்து குணசேகரன் என்னதான் வில்லத்தனத்தை காட்டி இருந்தாலும் இவருடைய நக்கலான காமெடி பேச்சுக்கு ரசிகர்கள் அதிகரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

Also read: பழனிச்சாமியை தேடி வீட்டிற்கு போகும் கோபியின் குடும்பம்.. திருமணத்துக்கு பொறுப்பேற்கும் பாக்கியா

அடுத்தபடியாக இதுவரை கதிரை எதிர்த்து பேசாமல் இருந்த நந்தினி திடீரென்று பேசிய ஒவ்வொரு வார்த்தையும் கதிரை வாய் அடைக்க செய்வது மட்டுமல்லாமல் பயப்படவும் வைத்திருக்கிறது என்பதை பார்க்கும் பொழுது நன்றாக இருக்கிறது. இனி குணசேகரன் மற்றும் கதிரின் ஆட்டம் காலியாக போகிறது.

இத்தனை நாள் ஜீவானந்தம் இவராகத்தான் இருக்கும் என்ற நினைப்புக்கு மத்தியில் இவர் வந்ததும் எல்லாரையும் புல்லரிக்க வைத்து விட்டது. அத்துடன் இந்த நாடகம் குடும்பத்தில் இருக்கும் பெண்மணிகள் மட்டும் பார்ப்பது தாண்டி அனைத்து ஆண்களையும் பார்க்கத் தூண்டி விடுகிறது. இனி வருகிற ஒவ்வொரு எபிசோடும் சும்மா தெறிக்க விடப்போகிறது.

Also read: கோபியை கதற கதற கலாய்த்த ஒட்டுமொத்த குடும்பம்.. அல்டிமேட் நக்கல் நையாண்டி

Trending News