+2 Result: மார்ச் மாதம் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு நடைபெற்றது. அதை தொடர்ந்து நேற்று நீட் தேர்வும் நாடு முழுவதும் நடத்தப்பட்டது.
இந்நிலையில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு ரிசல்ட் இன்று வெளியாகி உள்ளது. அதில் மாணவர்களை விட மாணவிகளின் தேர்ச்சி விகிதம் தான் அதிகமாக உள்ளது.
இந்நிலையில் நாங்குநேரி சம்பவத்தால் பாதிக்கப்பட்ட மாணவர் சின்ன துரையின் மதிப்பெண் பட்டியல் வெளியாகி உள்ளது. கடந்த வருடம் அவருக்கு நடந்த தாக்குதல் தமிழகத்தையே உலுக்கியது.
சின்ன துரையின் மதிப்பெண் பட்டியல்
சாதிய ஆதிக்கத்தால் மாணவரின் வீடு புகுந்து சகமானவர்கள் தாக்குதல் நடத்தியதில் சின்னத்துரை படுகாயமடைந்தார். அதையடுத்து அவருக்கு தவிர சிகிச்சையும் கொடுக்கப்பட்டது.
மேலும் இந்த சம்பவத்திலிருந்து மீண்டு வர அவருக்கு கவுன்சிலிங்கும் கொடுக்கப்பட்டது. அது மட்டுமின்றி மருத்துவமனையிலேயே இவர் காலாண்டு தேர்வு எழுதி இருந்தார்.
அதை தொடர்ந்து தற்போது அவர் பொதுத்தேர்வு எழுதியுள்ள நிலையில் 469 மதிப்பெண்களை பெற்று தேர்ச்சி அடைந்துள்ளார். இதற்கு அனைத்து தரப்பிலிருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து கொண்டிருக்கிறது.
இதை பார்க்கும் போது தனுஷ் பட டயலாக் தான் ஞாபகத்துக்கு வருகிறது. காசு பணம் இருந்தா எடுத்துக்குவாங்க. ஆனா படிப்ப மட்டும் தான் யாராலயும் புடுங்க முடியாதுன்னு அசுரன் படத்தில் சொல்வார்.
அப்படித்தான் பெரும் பாதிப்பை கடந்திருந்தாலும் சின்னத்துரை தடைகளை தாண்டி சாதித்து இருக்கிறார். இது மற்றவர்களுக்கும் ஒரு உதாரணமாக இருக்கிறது.