நாசர் தமிழ் சினிமாவில் ஒரு குணச்சித்திர நடிகராக மிகவும் பிரபலமானவர் என்பதுதான் நமக்குத் தெரியும், ஆனால் ஒரு இயக்குனராக, ஒரு தயாரிப்பாளராக, ஒரு டப்பிங் ஆர்டிஸ்டாக, ஒரு பிளேபேக் சிங்கராக பல முகங்களைக் கொண்டவர். ஒரு காலகட்டத்தில் மணிரத்னம், கமல்ஹாசன் படங்களில் முக்கியமான வில்லனாக பிரதிபலித்தவர் நாசர், அதில் முக்கியமானவை ரோஜா, தேவர் மகன், பம்பாய், குருதிப்புனல் போன்ற படங்கள்.
பாகுபலி படத்தில் முரட்டு வில்லனாக நடித்து இந்திய அளவில் பெயரையும் தட்டி சென்றார். தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல் ஹிந்தி, உருது, இங்கிலீஷ், அரபிக், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழிகளிலும் பிரபலமாகிவிட்டார். இவர் இயக்கிய படங்களின் வரிசை தற்போது பார்க்கலாம்
அவதாரம்:
இசையை மையமாக வைத்து கதை எழுதி,நடித்து, நாசரால் இயக்கப்பட்ட படம் தான் அவதாரம். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ரேவதி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இசைஞானி இளையராஜா என்ற படத்திற்கு இசையமைத்து இருப்பார். 1995-ல் வெளியான இந்த படத்தின் பாடல்கள் இப்பொழுது வரை போற்றபடுகிறது. இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானார் நாசர்.
தேவதை:
நாசர் இயக்கி, தயாரித்து, நடித்து வெளிவந்த படம் தேவதை. நாசர், கீர்த்தி ரெட்டி, வினித் போன்ற பிரபலங்கள் நடிப்பில் 1997 இல் வெளிவந்தது. தமிழ் பேண்டசி கலந்த இந்த படம் மக்கள் மத்தியில் சுமாராக மட்டுமே ஓடியது. 1997இல் வெளியான இந்த தேவதை படம் மிகவும் வித்தியாசமான படமாகவே பார்க்கப்பட்டது..
மாயன்:
நாசர் மீண்டும் இயக்கி, நடித்த படம் மாயன். இந்த படத்தில் நாசர், ரோஜா, விந்தியா, ரஞ்சிதா போன்ற பிரபலங்கள் நடித்து இருப்பார்கள். வடிவேலு முக்கியமான காமெடி கதாபாத்திரத்தில் கலக்கியிருப்பார் என்றே கூறலாம். நாசர் இந்த படத்தில் மாயன் என்ற கதாபாத்திரத்தில் மிக அற்புதமாக நடித்திருப்பார், இந்த படமும் சுமாராக ஓடியது..
பாப்கார்ன்:
மோகன்லால், சிம்ரன், வடிவேலு, ஊர்வசி போன்ற பிரபலங்கள் நடிப்பில் யுவன் சங்கர் ராஜா இசையில் 2003ஆம் ஆண்டு வெளிவந்த படம் பாப்கார்ன். ரொமான்டிக், டிராமா கலந்த இந்த படம் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்த படத்தில் அனைத்து பாடலும் சூப்பர் ஹிட்டானது. பாக்ஸ் ஆபீஸ் வசூல் சாதனை படைத்த படம் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படி தமிழ் சினிமாவில் தனது வில்லத்தனமான நடிப்பின் மூலம் ரசிகர் மனதில் பட்டா போட்டு அமர்ந்திருக்கும் நாசர், சினிமாவின் பொக்கிஷம் என்றே கூறலாம். அவர் நடிக்கும் கதபாத்திரமாகவே மாறி விடுவார், அவர் இயல்பான நடிப்பினால் தான் இன்றளவும் தமிழ் ரசிகர்கள் தலையில் தூக்கிவைத்து ஆடுகின்றன.
இந்த வருடம் கூட முன்னணி நடிகர்களான தளபதி மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் படமான மாஸ்டர்,அண்ணாதா படத்தில் நடித்துள்ளார்.