பா ரஞ்சித் இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராம், கலையரசன், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் நட்சத்திரம் நகர்கிறது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியாக இருக்கும் இந்த திரைப்படத்தின் ப்ரிவ்யூ ஷோ சமீபத்தில் நடைபெற்றது.
அந்த நிகழ்வில் பட குழுவினர் உட்பட பலரும் கலந்து கொண்டனர். மேலும் ஆர்யா, ஜெயராம், அவருடைய மனைவி உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டு திரைப்படத்தை பார்த்து ரசித்தனர். தற்போது இந்த திரைப்படம் எப்படி இருக்கிறது என்பது பற்றிய கருத்துக்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி கொண்டிருக்கிறது.
Also read : ஒரு நடிகரை மட்டும் விட்டுக்கொடுக்காத பா ரஞ்சித்.. 6 படத்தில் வாய்ப்பு கொடுத்தும் கிடைக்காத அங்கீகாரம்
அந்த வகையில் இந்த படத்திற்கு தற்போது பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்து வருகிறது. பா ரஞ்சித் கடைசியாக சார்பட்டா பரம்பரை என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். அதை தொடர்ந்து வெளியாக இருக்கும் இந்த திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்தது.

தற்போது வெளியாகி கொண்டிருக்கும் விமர்சனங்களை பார்க்கும் போது அந்த எதிர்பார்ப்பு நிச்சயம் பூர்த்தியாகும் என்று தெரிகிறது. அதன் அடிப்படையில் இந்த படத்தில் நடித்திருக்கும் அனைத்து கதாபாத்திரங்களும் தங்களுடைய வேலையை கச்சிதமாக செய்திருப்பதாகவும், நடிகர்களின் தேர்வும் சிறப்பாக இருக்கிறது என்றும் விமர்சனங்கள் வருகின்றது.
Also read : நட்சத்திரம் நகர்கிறது வைரலாகும் ட்ரெய்லர்.. பட்டையை கிளப்பிய பா.ரஞ்சித்
இதுதான் படத்திற்கு மிகப்பெரிய பலமாகவும் அமைந்துள்ளது. மற்றபடி படத்தில் நெகட்டிவ் என்று சொல்வதற்கு எதுவும் இல்லை என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். அந்த வகையில் இந்த திரைப்படம் காளிதாஸ் ஜெயராமுக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை.

வாரிசு நடிகராக அறிமுகமாகி இருந்தாலும் தமிழில் அவருடைய படங்கள் பெரிய அளவில் வரவேற்பு பெறவில்லை. கடைசியாக இவர் விக்ரம் திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆனாலும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வரவேண்டும் என்பதுதான் அவருடைய ஆசை. அது தற்போது பா ரஞ்சித் மூலம் பூர்த்தியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also read : விக்ரம் செய்த அநியாயம்.. கூட்ட நெரிசலில் சிக்கி போலீசிடம் தடி அடி வாங்கிய விசுவாசிகள்