வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

நெருங்க முடியாத உயரத்தில் இருக்கும் விஜய் சேதுபதி.. 3 ஆண்டுகளாக காத்திருக்கும் தேசிய விருது இயக்குனர்

விஜய் சேதுபதி இப்போது கோலிவுட், பாலிவுட் என்று படு பிசியாக இருக்கிறார். அதிலும் அவர் இப்போது சென்னையில் இருப்பதை விட மும்பையில் தான் அதிக நாட்கள் இருக்கிறாராம். அதனாலேயே அவரை யாராலும் நெருங்க முடியாத சூழல் இருக்கிறது. அதிலும் தேசிய விருது இயக்குனர் ஒருவர் அவருக்காக மூன்று ஆண்டுகள் வரை காத்திருக்கிறார்.

தமிழ் திரையுலகில் தன்னுடைய எதார்த்தமான, மண்மணம் மாறாத கதையாலும் ரசிகர்களை கவர்ந்த இயக்குனர் சேரன் ஒரு நடிகராகவும் இருக்கிறார். பல வெற்றி திரைப்படங்களை கொடுத்த இவர் அதற்காக தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளையும் பெற்றிருக்கிறார். நடிப்பு மட்டுமல்லாமல் இயக்கத்திலும் கவனம் செலுத்தி வந்த இவர் கடைசியாக திருமணம் என்ற படத்தை இயக்கியிருந்தார்.

Also read: விடுதலை பட வெற்றிக்கு பின் வெற்றிமாறன் தொடங்கும் 3 படங்கள்.. விஜய் சேதுபதிக்கு அடித்த லக்

அதைத்தொடர்ந்து தற்போது அவர் சிறு இடைவேளைக்கு பிறகு மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுத்திருக்கிறார். அதற்காக அற்புதமான கதை ஒன்றை தயார் செய்திருந்த சேரன், விஜய் சேதுபதியிடம் அதை கூறியிருக்கிறார். அண்ணன், தங்கை பாசத்தை மையப்படுத்தி இருந்த அந்த கதை ரொம்பவும் பிடித்து போனதால் அவரும் படத்தில் நடிக்க சம்மதித்திருக்கிறார்.

ஆனால் இப்போது வில்லன், குணச்சித்திரம், ஹீரோ போன்ற பல கதாபாத்திரங்களிலும் விஜய் சேதுபதி நடித்து வருவதால் சிறிது காலம் காத்திருக்கும் படி சேரனிடம் கூறியிருக்கிறார். இப்படியே மூன்று ஆண்டுகள் கடந்து இருக்கிறது. இதற்கிடையில் அவரை சேரனால் நெருங்க கூட முடியவில்லையாம்.

Also read: லவ்வர் பாயாக மாறப்போகும் விஜய் சேதுபதி.. ரீ என்ட்ரியில் மிரட்ட வரும் இயக்குனர்

ஆனால் இப்போது காலம் கனிந்து வந்திருக்கிறது. விஜய் சேதுபதி சேரனுடன் கைகோர்ப்பதற்கு இப்போது தயாராக இருக்கிறாராம். தற்போது வெப் சீரிஸ் ஒன்றில் சேரன் பிஸியாக இருக்கிறார். ஆனாலும் அதை விரைவாக முடித்துவிட்டு விஜய் சேதுபதிக்கான கதையை அவர் மெருகேற்ற இருக்கிறாராம்.

விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளிவர இருக்கிறது. அந்த வகையில் மூன்று ஆண்டுகளாக தவம் இருந்த சேரனுக்கு தற்போது ஒரு ஜாக்பாட் அடித்திருக்கிறது. இதன் மூலம் அவர் மீண்டும் தன்னுடைய இடத்தை தக்க வைத்துக் கொள்வார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Also read: லியோ படத்தில் இணைந்த விஜய் சேதுபதி.. லோகேஷின் மாஸ்டர் பிளான்

Trending News