திங்கட்கிழமை, ஜனவரி 20, 2025

இந்த வாட்டி ஏமாற மாட்டேன்.. போட்டி நடிகையை காலி செய்ய துணிந்து இறங்கிய நேஷனல் க்ரஷ்

Gossip: கிரஷ் நடிகை இப்போது கைவசம் சில படங்களை வைத்துக்கொண்டு பிஸியாக நடித்து வருகிறார். அதில் அவர் நடித்துள்ள பான் இந்தியா படத்தின் இரண்டாம் பாகம் பெறும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் நடந்த ப்ரமோஷனில் அம்மணி க்யூட்டாக பேசி ரசிகர்களை இம்ப்ரஸ் செய்திருந்தார். அதேபோல் படத்தில் ஒரு பாடலுக்கு அந்த இளம் நடிகையும் ஆடியிருக்கிறார். இந்த இருவருக்குள்ளும் தொழில் ரீதியான போட்டி இருக்கத்தான் செய்கிறது.

ஆனால் ப்ரமோஷன் நிகழ்வில் இருவரும் தோழிகள் போல் சிரித்து பேசியது ஆச்சரியம் தான். அது ஏன் என்று இப்போது தெரியவந்துள்ளது. அதாவது அந்த படத்தின் பாடல்கள் இப்போது சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது.

தாராளம் காட்டிய க்ரஷ் நடிகை

அதிலும் சமீபத்தில் வெளியான பாடலில் கிரஷ் நடிகை ரொம்பவே தாராளம் காட்டி நடித்திருந்தார். முதல் பாகத்திலும் அவர் இது போல் நடித்து இருந்தாலும் இப்போது இன்னும் தாராளம் நிரம்பி வழிகிறது.

இதற்கு முக்கிய காரணம் முதல் பாகத்தில் சமத்து நடிகை ஒரு பாடலுக்கு ஆட்டம் போட்டு ஒட்டுமொத்த புகழையும் அள்ளி சென்று விட்டார். இதனால் கிரஷ் நடிகை கொஞ்சம் பின் தங்கி போனார்.

அந்த வருத்தம் அவருக்கு ரொம்பவே இருந்த நிலையில் இந்த முறை ஏமாற மாட்டேன் என களமிறங்கி விட்டார். இப்போதும் இளம் நடிகை ஒரு பாடலுக்கு ஆடுகிறார் என்று சொன்னவுடன் அவரும் தாராளம் காட்ட தயார் என சொல்லிவிட்டாராம்.

அதனால்தான் தற்போது பாடல்களில் அவருடைய அவதாரத்தை பார்த்து ரசிகர்கள் கிறங்கி போய் இருக்கின்றனர். இதற்காக அம்மணி இரு மடங்கு சம்பளத்தை வாங்கி பொட்டியை நிரப்பிக் கொண்டது தனி கதை.

Trending News