வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

பட வாய்ப்பு இழந்ததால் எடுத்த முடிவு.. சீரியலில் நுழையும் நாட்டாமை படத்தின் டீச்சர்

ஒரு நடிகை என்னதான் படத்தில் நடித்து பெரிய ரசிகர்கள் பட்டாளமே வைத்து இருந்தாலும் பட வாய்ப்பு இல்லை என்றால் இருக்கும் இடமே தெரியாமல் போய்விடுவார். அப்படித்தான் இந்த ஒரு நடிகைக்கும் அதே நிலைமை ஆகிவிட்டது. இவர் நடித்த படத்தில் இவரின் கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்டு வந்தாலும் அடுத்த படங்களில் தொடர்ச்சியாக நடிக்க இவருக்கு வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது.

நாட்டாமை படத்தில் டீச்சர் எனும் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் ராணி. இந்தப் படத்தில் நடித்ததில் இருந்து அன்றைய இளைஞர்களின் மனதில் இடம் பிடித்தார். இப்பொழுது வரை நாட்டமை டீச்சர் என்றால் ஞாபகத்துக்கு வரும் அளவிற்கு இவருடைய நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டிருந்தது.

Also read: சூப்பர் ஸ்டார் புகழ் சரத்குமார் வில்லனாக நடித்த 5 படங்கள்.. மிஸ்டர் சென்னை வென்றதால் வந்த வாய்ப்பு

மேலும் இவர் தமிழ்,தெலுங்கு,கன்னடம் என பல மொழிகளில் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அடுத்து இவர் நடிப்பில் வெளிவந்த அவ்வை சண்முகி, நம்ம அண்ணாச்சி,ராசையா,காதல் கோட்டை இந்த படங்களில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். அடுத்ததாக விக்ரம் நடிப்பில் வெளிவந்த ஜெமினி படத்தில் ‘ஓ போடு’எனும் பாடலில் விக்ரமனுடன் ஆடி இருப்பார்.

இவர் என்னதான் முன்னணி நடிகர்களுடன் நடித்தாலும் சில படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடிக்க மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. இதனால் பட வாய்ப்பு இழந்துபோன ராணி சினிமா துறையை விட்டு நீண்ட காலமாக விலகியே இருந்தார். பின்பு சினிமா துறையில் எப்படியாவது ஜெயிக்க வேண்டும் என்று எண்ணத்தில் சின்னத்திரைக்கு அடி எடுத்து வைக்கிறார்.

Also read: ஆண்டவன் இருக்காண்டா குமாரு.. பாக்யாவின் அருமையை புரிய வைத்த ராதிகா, கோபிக்கு வச்ச வேட்டு

பொதுவாகவே சில நடிகர்கள்,நடிகைகள் பெரிய திரையில் இருந்து சின்னத்திரைக்கு நுழைந்து அதில் வெற்றி பெற வேண்டும் என்று நடித்து வருவது ஒரு பெரிய ட்ரெண்டாகி வருகிறது. அதே பாணியை கையில் எடுத்து வரும் ராணி அடுத்த கட்டமாக ஜீ தமிழில் வரவிருக்கும் சீதாராமன் எனும் நாடகத்தில் அம்மா கதாபாத்திரத்தில் நடிக்கப் போகிறார்.

இதைக் கேட்ட இவரது ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் இந்த நாடகத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். மேலும் இந்த நாடகத்தின் மூலம் சினிமாவில் தொலைத்த இவரது வாழ்க்கையை மறுபடியும் மீட்டெடுக்கும் முயற்சியில் நடித்து வருகிறார்.

Also read: 2023-லும் உருட்டும் பாரதிகண்ணம்மா.. அப்பனா இப்ப முடிக்க மாட்டாங்களா

Trending News