90களில் பிரபல ஹீரோவாக வளர்ந்து வந்த நவரச நாயகன் கார்த்திக் ஏராளமான திரைப்படங்களில் நடித்திருக்கிறார். நடிப்பு மட்டுமல்லாமல் இவர் திரைப்படங்களில் சில பாடல்களையும் தன் சொந்த குரலில் பாடி இருக்கிறார். அந்த வகையில் எந்தெந்த பாடல்களை கார்த்திக் பாடி இருக்கிறார் என்பதை இங்கு காண்போம்.
அமரன் 1992 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படத்தில் கார்த்திக் ஒரு பாடலை பாடியிருக்கிறார். ஆதித்யன் இசையில் வெத்தல போட்ட சோக்குல என்ற பாடல் தான் அது. அந்த காலகட்டத்தில் இளைஞர்களை குத்தாட்டம் போட வைத்த பாடல்களில் இது முக்கியமானதாகும். இப்பவும் கூட நிறைய திருவிழாக்களில் இந்த பாடலை நம்மால் கேட்க முடியும்.
Also read: கார்த்திக்கு முன்பே பட்டத்தை வென்ற உலகநாயகன்.. இது என்ன புது உருட்ட இருக்கு
சுயமரியாதை 1992 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த படத்தில் கார்த்திக், பல்லவி நடித்திருப்பார்கள். சிவாஜி ராஜா இசையமைத்த இந்த படத்தில் அவர் மலேசியா வாசுதேவன் உடன் இணைந்து வான்மீது மேகம் என்ற பாடலை பாடியிருந்தார்.
சின்ன ஜமீன் 1993 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படத்தில் கார்த்திக் ஒனப்பு தட்டு புல்லாக்கு என்ற பாடலை பாடியிருக்கிறார். இளையராஜா இசையமைத்த இந்த படத்தில் கார்த்திக்குடன் இணைந்து ஸ்வர்ணலதா பாடியிருப்பார். நல்ல வரவேற்பை பெற்ற இந்த பாடல் இப்போதும் 90ஸ் ரசிகர்களின் ஃபேவரைட்டாக இருக்கிறது.
Also read: நவரச நாயகனை வளர்த்துவிட்ட சுந்தர் சி.. இவர்கள் காம்போவில் பட்டைய கிளப்பிய 6 படங்கள்!
சிஷ்யா 1997 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படத்தில் கார்த்திக், ரோஷினி இணைந்து நடித்திருப்பார்கள். அதில் அப்பல்லோ அப்பல்லோ என்ற பாடலை கார்த்திக் பாடியிருப்பார். ஆனால் இப்படம் எதிர்பார்த்த அளவு ரசிகர்களிடம் ரீச் ஆகவில்லை.
பிஸ்தா 1997 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த படத்தில் கார்த்திக், நக்மா நடித்திருப்பார்கள். எஸ் ஏ ராஜ்குமார் இசையில் கோழிக்கறி கொண்டு வரட்டா என்ற பாடலை கார்த்திக் பாடியிருப்பார்.
Also read: ஹீரோ வாய்ப்பு வேண்டாம் என ஒதுங்கிய 6 பழைய காதாநாயகர்கள்.. வாய்ப்பு வந்தும் தெறித்து ஓடிய சத்யராஜ்
பூவேலி 1998 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படத்திற்கு பரத்வாஜ் இசையமைத்து இருந்தார். கார்த்திக், கௌசல்யா, அப்பாஸ் ஆகிய பலர் நடித்திருந்த இந்த படத்தில் கதை சொல்லப் போறேன் என்ற பாடலை கார்த்திக் பாடியிருந்தார்.
ஹரிச்சந்திரா 1998 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த படத்தில் கார்த்திக் ஹரிச்சந்திரன் வரான் என்ற பாடலை பாடியிருக்கிறார். இந்தப் பாடலுக்குப் பிறகு அவர் படங்களில் வேறு எந்த பாடலையும் பாடவில்லை.