வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

விஜய் போட்ட பிளானில் சிக்கிக்கொண்ட நவீன்.. காதலில் ஜெயிக்கப் போகும் யமுனா, சந்தோஷத்தில் காவேரி

Mahanadhi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மகாநதி சீரியலில், ராகினிக்கும் யமுனாவுக்கும் பெருசாக ஒரு வித்தியாசமும் இல்லை. இரண்டு பேருமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான். நவீனை எப்படியாவது கல்யாணம் பண்ணிவிட வேண்டும் என்று ராகினி பல தில்லாலங்கடி வேலையை பார்த்து பிளாக்மெயில் செய்தார். ஆனால் அப்பொழுதெல்லாம் ராகினி கெட்டவள், பொல்லாதவள் என்று அனைவரும் ஒதுக்கி முத்திரை குத்தினார்கள்.

அதிலும் காவேரி, இந்த உலகத்திலேயே ராகினி தான் கெட்டவள் என்பது போல் சொன்னார். ஆனால் தற்போது தன்னுடைய தங்கை வாழ்க்கை என்று வரும் பொழுது அதைதான் காவேரியும் செய்கிறார். நவீனுக்கு விருப்பமில்லை என்று தெரிந்தும் எப்படியாவது கல்யாணம் பண்ண வேண்டும் என்று யமுனா தொடர்ந்து டார்ச்சர் கொடுத்தார். ஆனாலும் கண்டுகொள்ளாத நவீனை பயமுறுத்தும் விதமாக தற்கொலைக்கு முயற்சி செய்தார்.

சுயநித்திற்காக நவீன் வாழ்க்கையை வீணாக்கும் விஜய் காவேரி

இதனால் காவேரி, தன் தங்கையின் வாழ்க்கையை காப்பாற்றி கொள்ள வேண்டும் என்பதற்காக நவீனுக்கு தொடர்ந்து டார்ச்சர் கொடுத்து யமுனாவிடம் சேர்த்து வைப்பதற்கு பல வேலைகளை பார்த்தார். அது எதுவும் நடக்காது என்று தெரிந்ததும் விஜய், காரியத்திற்குள் இறங்கிவிட்டார். அந்த வகையில் விஜய், நவீனை பார்த்து என் மனதிற்குள் காவிரி மனதிற்குள் காதல் வந்துவிட்டது.

நாங்கள் ஒருவரை ஒருவர் இல்லாமல் எங்களால் வாழ முடியாது. அதனால் நீ ஒதுங்கி உன் வேலையை போய் பார் என்று கூறிவிட்டார். அத்துடன் விடாமல் நீ யமுனாவை கல்யாணம் பண்ண வேண்டும் என்று பிளாக்மெயில் பண்ணும் அளவிற்கு விஜய், நவீனுக்கு குடைச்சல் கொடுக்கிறார். இதோடு விடாமல் நவீனின் பெற்றோர்களை சமரசம் செய்து அவர்கள் மூலமாக நவீன், யமுனா கழுத்தில் தாலி கட்டுவதற்கு விஜய் பிளான் பண்ணி விட்டார்.

அதன்படி நவீன் எப்படியும் யமுனா கழுத்தில் தாலி கட்டுவதற்கு கோவிலுக்கு வந்து விடுவார் என்று நம்பிக்கை வந்து விட்டது. அதனால் யமுனாவை மணப்பெண் மாதிரி ரெடி பண்ணி காவிரியை கோவிலுக்கு கூட்டிட்டு வர வைக்கிறார். அங்கே நவீன் வருவார் என்ற நம்பிக்கையில் அனைவரும் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இதனால் நவீன் என்ன ஆனாலும் போகக்கூடாது என்று முடிவுடன் இருக்கும் பொழுது நவீனின் அப்பா அம்மா வந்து விடுகிறார்கள்.

வந்ததும் இன்னும் எத்தனை நாள் தான் காவிரி நினைத்துக் கொண்டு உன்னுடைய வாழ்க்கையை சூனியம் பண்ண போகிறாய். அதனால் உனக்கு வேறு வழியில்லை, நீ யமுனா கழுத்தில் தாலி கட்ட தான் ஆக வேண்டும் என்று அவர்கள் விஜய் சொன்னபடி நவீனை கட்டாயப்படுத்தி கோவிலுக்கு கூட்டிட்டு வந்து விடுவார்கள். ஆக மொத்தத்தில் ஒரு கட்டாய கல்யாணத்தை விருப்பமே இல்லாமல் நவீனுக்கு அனைவரும் சேர்ந்து யமுனாவை கட்டி வைக்கப் போகிறார்கள்.

யமுனாவின் சந்தோஷத்திற்காக நவீன் வாழ்க்கை அநியாயமாக பாலாக போகிறது. இதற்கு உறுதுணையாக இருந்து அனைத்தையும் செய்தது விஜய் மற்றும் காவிரி தான். ஏனென்றால் நவீன் யமுனா வாழ்க்கையில் சுமுகம் நடந்துவிட்டால் இவர்கள் ஒன்று சேர்வதில் எந்தவித பிரச்சனையும் இல்லை என்பதற்காக சுயநலத்தில் அனைத்தையும் செய்து முடித்து விட்டார்கள்.

மகாநதி சீரியலில் நடந்த சம்பவங்கள்

Trending News