திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

நயன், திரிஷாவை ஓரம் கட்டிய ஐந்து “ஏ” கிரேடு நடிகைகள்.. லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கு நாங்க சளச்சவங்க இல்லை

டிரெண்டிற்கு ஏற்ப புது புது முகங்கள் அறிமுகமாகி கொண்டு இருக்கும் நிலையில் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர்கள் தான் நயன்தாரா மற்றும் திரிஷா. தற்போது இவர்களுக்கு போட்டியாக முன்னணி ஹீரோயின்களும் களம் இறங்கி உள்ளனர்.

பல பிரபல ஹீரோக்களோடு நடிக்கும் வாய்ப்பைப் பெற்று தன் மார்க்கெட்டை உயர்த்தி வருகின்றனர். அவ்வாறு நயன், திரிஷாவை ஓரம் கட்டிய 5 ஏ கிரேடு நடிகைகளை பற்றி இங்கு காணலாம்.

Also Read: படுக்கையில் அந்தரங்க டார்ச்சர் செய்த விஷ்ணு.. கேவலப்படுத்தி நீலி கண்ணீர் வடிக்கும் சம்யுக்தா

கீர்த்தி சுரேஷ்: சாணிக் காயிதம் வெற்றிக்கு பிறகு மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் உடன் மாமன்னன் திரைப்படத்தில் நடித்துள்ளார். அதைத்தொடர்ந்து சைரன் என்னும் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிக்க உள்ளார். அடுத்தடுத்த பட வாய்ப்புகளில் கமிட்டாகி வரும் இவர் டாப் ஹீரோயின்களுக்கு டஃப் கொடுத்து வருகிறார்.

ப்ரியா பவானி சங்கர்: ருத்ரன், பத்து தல வெற்றிக்கு பிறகு ரா. கார்த்திக் இயக்கத்தில் வெளிவர இருக்கும் வான் என்னும் திரைப்படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார். அதன் பின் இந்தியன் 2 படத்திலும் வாய்ப்பு கிடைத்து கமிட்டாகி வருகிறார். இவ்வாறு அடுத்தடுத்த படங்களில் தன் நடிப்பினை வெளிக்காட்டி முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார் ப்ரியா பவானி சங்கர்.

Also Read: எப்புட்ரா, அட்டர் பிளாப்பான சமந்தாவின் படம்.. மகிழ்ச்சியில் திளைக்க வைத்த வெளிநாட்டு சம்பவம்

காஜல் அகர்வால்: ஷங்கர் இயக்கத்தில் வெளிவர இருக்கும் இந்தியன் 2 வில் முன்னணி ஹீரோயினாக காஜல் அகர்வால் இடம்பெறுகிறார். அதைத்தொடர்ந்து கருங்காவியம், சியான் விக்ரமின் நடிப்பில் உருவாக இருக்கும் கருடா படத்திலும் இவர் கமிட்டாகி வருகிறார்.

சாய் பல்லவி: கார்கி படத்திற்குப் பிறகு ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவர இருக்கும் எஸ்.கே 21 படத்தில் கதாநாயகியாக இருக்கிறார் சாய் பல்லவி. அதன் பின் தெலுங்கில் புஷ்பா த ரூல் ஸ்டோரி என்னும் படத்திலும் இவர் இடம் பெறுகிறார் என்பது இவரின் முயற்சிக்கு கிடைத்த வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.

Also Read: உதயநிதி கூப்பிட்டு வர மறுத்த ரஜினி.. கூட்டணி போட ஒப்புக்கொண்ட கமல்

ஐஸ்வர்யா ராஜேஷ்: ரன் பேபி ரன், ஃபர்ஹானா படத்திற்குப் பிறகு இவர் இந்தியன் 2, இடம் பொருள் ஏவல், தீயவர் குலைகள் நடுங்க போன்ற படங்களின் படப்பிடிப்பில் பிசியாக இருந்து வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். போற போக்க பார்த்தால் இவரின் படங்கள் மாதம் ஒன்று வெளியாகும் என்ற அளவிற்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறார்.

Trending News