புதன்கிழமை, ஜனவரி 8, 2025

நினைத்தாலே கசக்கும் நட்சத்திர ஜோடியின் அலம்பல்கள்.. ரசிகர்களை கொல காண்டாக்கும் நயனின் அட்ராசிட்டி

Nayan and Vicky’s posts that make fans unhappy: தமிழ் சினிமாவில் “காதலுக்கும் பஞ்சமில்லை! காதல் முறிவுக்கும் பஞ்சமில்லை!” என்பது போல் வானவில்லென தோன்றிய நேரத்தில், காதல் மறைந்துவிடும் மாயமும் நிகழ்ந்து தான் வருகிறது. இன்றைய சூழலில் காதல் கல்யாணத்தில் முடிவது என்பதே ஆச்சரியப்படும் ஒன்றாக மாறிவிட்டது. 

தமிழ் சினிமாவின் மூலம்  நீண்ட நாட்களாக காதலித்து கல்யாணத்தில் இணைந்த ஜோடிகள் தான் நயன்தாரா விக்கி தம்பதியினர். அடிக்கடி ஒன்றாக புகைப்படம் எடுத்து போட்டு தங்கள் காதலின் ஆழத்தை வெளிப்படுத்தியும் வருகின்றனர் இந்த ஜோடிகள். 

“உச்சி முதல் பாதம் வரை! உள்ளிருக்கும் ஆவி வரை! உன்னை கண்ணில் வைத்து பார்த்துக் கொள்வேன்!” என்று உருகும் ஜோடிகள் கூட, சில வருடங்கள் ஆனால், காதலும் கடந்து போகும் என்பது போல் கடந்து போய் விடுகின்றனர். அதேபோல் சில நாட்களுக்கு முன் நயன்தாராவின் இன்ஸ்டாகிராமில் விக்கியின் பெயர் ஃபாலோ அப்பில் இல்லாது போகவே, பிரிவுக்கனையை எழுப்பி பிரச்சனையை பூதாகரமாக்கி விவாகரத்து வரை சென்று விட்டனர் ரசிகர்கள். 

Also read: நயன்தாரா பட கதையை காப்பி அடித்த மஞ்சுமல் பாய்ஸ்.. வசூலில் மிரட்டும் திரில்லர்

இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வண்ணம் ஒரு தரமான செயலை செய்துள்ளனர் நயன் மற்றும் விக்கி. சங்ககாலத்தில் அன்னம் விடு தூது, கிளிவிடு தூது, புறா விடு தூது என பல தூதுக்களை அனுப்பி தன் இணையைத் தவிர மற்றவர்களுக்கு தெரியா வண்ணம் காதலை சொல்லிய விதம் போய், மத்த அனிமல்ஸ் ஏன் டிஸ்டர்ப் பண்ண வேண்டும் என்று, பக்கத்தில் இருப்பவர்களை கூட கண்டுக்காமல் ஓவரா ரொமான்ஸ் பண்ணி முகம் சுளிக்க வைக்கின்றனர் இந்த நட்சத்திர ஜோடிகள். கேட்டால் காதலை புனித படுத்துவதாக, புலம்பல் வேறு.

நண்பர் பக்கத்திலிருந்து இசையமைக்க பொங்கி வரும் காதல் உணர்வால் நயன்தாரா மற்றும் விக்கி இருவரும் கட்டி அணைத்து, முத்தமிடுவதோடு அவ்வாறு இருக்கும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களையும் வீடியோவையும் வலைதளங்களில் பதிவிட்டு உள்ளனர். இப்படி செய்து தான் நாங்கள் ஒன்றாக இருக்கிறோம் டைவர்ஸ் இல்லை என்பதை நிரூபிக்கிறார்களாம். 

இதை பார்த்த ரசிகர்கள் ஒருபுறம் வரவேற்றாலும் சிலரோ மத்தவங்களுக்காக தான் இவங்க லவ் பண்ணி மேரேஜ் பண்ணி இருக்காங்கன்னு கிண்டல் பண்ணிட்டு வருகிறார்கள். கணவன் மனைவி இடையேயான ஊடலும் கூடலும் மற்றவர்களுக்கு தெரியாத வரை மட்டுமே சிறப்பு இதை உணர்வது  கலைஞனின் பொறுப்பு என்று முடித்துக் கொள்வோம்.

Also read: இப்படியே போனா பொழப்பு ஆட்டம் கண்டுடும்.. சாகசத்துக்கு தயாராகும் நயன்தாரா

Trending News