Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

10 பவுன்சர்களுடன் நயன்தாரா செய்யும் அழிச்சாட்டியம்.. பரிதவிக்கும் விக்னேஷ் சிவன்

10 பவுன்சர்களுடன் நயன்தாரா செய்யும் அழிச்சாட்டியம்.. பரிதவிக்கும் விக்னேஷ் சிவன்

தயாரிப்பாளர்களுக்கு பெரிய தலைவலியை கொடுத்திருக்கும் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன்

Nayanthara: ஆளே இல்லாத கடைக்கு யாருக்குடா டீ ஆத்துற என பிரபல நகைச்சுவை காட்சி ஒன்றில் விவேக் கேட்பார். அப்படித்தான் ஆகிவிட்டது இப்போது நயன்தாராவின் நிலைமையும். நயன்தாராவுக்கு மார்க்கெட் போய்விட்டது என்பது இந்திய சினிமாவில் இருக்கும் அத்தனை பேருக்கும் தெரியும். அப்படி இருந்தும் எதுவுமே நடக்காதது போல அவர் அலட்டிக் கொள்வது தான் ரொம்ப ஓவராக இருக்கிறது.

ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டில் மிகப்பெரிய இடத்தை பிடித்து விடலாம் என்று ஆசைப்பட்ட நயனுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது. படத்தில் அம்மா கேரக்டரில் நடித்த தீபிகா படுகோனை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாட ஆரம்பித்துவிட்டார்கள் இந்தி ரசிகர்கள். சரி வாழ வைத்த தமிழ்நாட்டிற்கு வந்து அன்னபூரணியாக மாறலாம் என்று பார்த்தால், இங்கேயும் பாச்சா பலிக்காமல் போய்விட்டது.

ஏதாவது ஒரு படம் கை கொடுத்தாலும் அப்படியே பிடித்துக் கொண்டு மேலே ஏறி விடலாம் என்று ஒரு பக்கம் நயன்தாரா முயற்சி செய்து வருகிறார். அதே நேரத்தில் சினிமா கை கொடுக்கும் வரை சம்பாதித்த பணத்தை முதலீடு செய்து, பிசினஸில் லாபம் பார்க்கலாம் என்று ஐடியாவில் பல இடங்களில் முதலீடு செய்து வருகிறார். பத்தாத குறைக்கு கிடைக்கும் பட வாய்ப்புகளிலும், தயாரிப்பாளர்களை தர்மசங்கடத்திற்கு உள்ளாக்கி வருகிறார்.

மார்க்கெட்டே இல்லாத போதும் நயன்தாரா தன்னுடைய சம்பளத்தை 10 கோடியாக நிர்ணயித்திருக்கிறார். நயன்தாரா என்ற பெயரை வைத்து படத்தை ஓட்டி விடலாம் என தயாரிப்பாளர்களும் அவரை தேடி போகிறார்கள். நயன்தாராவுக்கு இப்போது 10 பவுன்சர்கள் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வருகிறார்கள். அவர்களுக்கு சம்பளம் நயன்தாரா தரப்பில் இருந்து கொடுப்பது கிடையாது.

நயன்தாரா செய்யும் அழிச்சாட்டியம்

நயன்தாரா கூட இருக்கும் 10 பவுன்சர்களுக்கும் சம்பளம் தயாரிப்பாளர் தான் கொடுக்க வேண்டும். இதற்கு என்றே தனியாக இரண்டு கோடி ஆகிறது. நயன்தாராவை ஒரு படத்தில் நடிக்க வைக்க கிட்டத்தட்ட 12 கோடி தயாரிப்பாளர்கள் செலவு செய்ய வேண்டி வருகிறது. இதில் அவர் ஹோட்டலில் தங்கும் செலவு, மேக் அப், ஹேர் ஸ்டைலிஷ் எல்லாம் தனியாக பணம் கொடுக்க வேண்டும்.

ஏற்கனவே சமாளிக்க முடியாமல் தயாரிப்பாளர்கள் கஷ்டப்பட்டு வருகிறார்கள். இது போன்ற சமயத்தில் பெரிய தலைவலியை ஏற்படுத்தியிருக்கிறார் நயன்தாராவின் ஆசை கணவர் விக்னேஷ் சிவன். அதாவது தன்னுடைய காதல் மனைவி நயன்தாராவுக்கு இப்போது இருக்கும் 10 பவுன்சர்கள் போதாதாம். இன்னும் இரண்டு பவுன்சர்கள் வேண்டுமென்று கேட்டு அடம் பிடித்து வருகிறாராம்.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.