வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

கவர்ச்சியில் தீபிகா படுகோனுக்கே டஃப் கொடுத்த நயன்.. லீக்கான ஜவான் பட காட்சியால் அதிர்ச்சியில் உறைந்த அட்லி

சமீபத்தில் ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் நடிப்பில் வெளியான பதான் படத்திற்கு ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனால் இதில் தீபிகா போட்ட கவர்ச்சி ஆட்டம் இளசுகளை திணறடிக்கும் வகையில் இருந்தது. அதிலும் படு கிளாமராக இறங்கி அடித்துள்ள தீபிகா படுகோன் பாலிவுட் நடிகைகளுக்கெல்லாம் சவால் விட்டுள்ளார்.

பீச்சில் நீச்சல் உடையில் இவர் போட்ட ஆட்டத்தை பார்த்து பாலிவுட்டே ஆடிப் போய் உள்ளது. இதனால் கோலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டிற்கு அறிமுகமாகிறார்.

Also Read: ஜவான் படத்தில் நயன்தாராவுக்கு அட்லீ போட்ட கண்டிஷன்.. மாட்டிக்கொண்டு முழிக்கும் லேடி சூப்பர் ஸ்டார்

இந்நிலையில் கவர்ச்சியில் தீபிகா படுகோனுக்கே டஃப் கொடுக்கும் வகையில் நயன்தாரா ஜவான் படத்தில் நீச்சல் உடையில் என்ட்ரி கொடுத்திருக்கிறார். இந்நிலையில் தற்போது சொகுசு படகில் நடிகை நயன்தாராவும் ஷாருக்கானும் டூயட் பாடும் அட்டகாசமான பாடல் காட்சி ஒன்று படமாக்கப்பட்டுள்ளது. இந்த காட்சிதான் படத்திற்கு ஹைலைட் என்பதால் நடுக்கடலில் காட்சிப்படுத்தப்பட்டது.

ஆனால் சிலர் வேறொரு படகிலிருந்து படக்குழுவினருக்கே தெரியாமலே இந்த காட்சியை எடுத்து இணையத்தில் லீக் செய்து விட்டனர். இதனால் அட்லி அதிர்ச்சியில் உறைந்துள்ளார். தற்போது இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாக பரவுகிறது. இதனால் அட்லி எப்படியாவது இந்த வீடியோவை இணையத்திலிருந்து தூக்கி விட வேண்டும் என்று பல முயற்சிகளை மேற்கொள்கிறாராம்.

Also Read: பாலிவுட் போயும் வேலையை காட்டிய அட்லி.. ரஜினி ஸ்டைலில் சண்டை போட்ட ஷாருக்கான், லீக்கான காட்சிகள்

ஏற்கனவே ஜவான் படத்தில் ஷாருக்கான் தந்தை, மகன் என்ற இரண்டு கேரக்டரில் நடிப்பதாகவும், இதில் தந்தையாக நடிக்கும் ஷாருக்கானின் வயதான கெட்டப்பும் இணையத்தில் லீக் ஆனதும் குறிப்பிடத்தக்கது. அதன் தொடர்ச்சியாக இப்போது அந்த படத்தின் டூயட் சாங் லீக் ஆகி உள்ளது.

அது மட்டுமல்ல பதான் படத்தில் தீபிகா படுகோன் செய்த சேட்டைகளை விட ஜவான் படத்தில் ஷாருக்கான் உடன் நயன்தாரா காட்டியிருக்கும் கவர்ச்சி கண் கூசும் அளவுக்கு இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. ஜவான் படத்திற்கு பிறகு நயன்தாரா பாலிவுட் நடிகைகளுக்கு எல்லாம் கடும் போட்டியாக மாறுவார் போல் தெரிகிறது.

லீக்கான ஜவான் படத்தின் டூயட் சாங் காட்சி

jawaan-1-cinemapettai
jawaan-1-cinemapettai

Also Read: அட்லீ மேல் விழுந்த மொத்த பழி.. பதான் செய்த வேலையால் டார்ச்சர் கொடுக்கும் ஷாருக்கான்!

Trending News