வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

நயன் லீக்ஸ் சீக்கிரமே வந்துரும், தனுஷ் விட்ட ரூட்.. பொறாமையில் செய்த வேலை

கடந்த 3 நாட்களாக ஹாட் டாப்பிக் ஆக இருப்பது, நயன்தாரா தனுஷ் பஞ்சாயத்து தான். ஆளுக்கு ஒரு கருத்து தெரிவித்து வருகிறார்கள். எது எப்படியோ நயன்தாரா நினைத்தது நடந்துவிட்டது. அவரது ஆவணப்படத்துக்கு இதுவே ஒரு சிறப்பான ப்ரோமோஷனாக அமைந்துவிட்டது.

இந்த நிலையில் ஊரு ரெண்டு பட்டால், கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பது போல, பாடகி சுசித்ரா தற்போது தனது பங்குக்கு கொளுத்தி போட்டுக்கொண்டிருக்கிறார். நயன்தாரா விக்னேஷ் சிவன் காதலுக்கு நானும் ரவுடி தான் படம் ஒரு பாலமாக அமைந்தது. தற்போது அவரையே திருமணம் செய்துகொண்டு குழந்தை குட்டி என்று நிம்மதியாக இருக்கிறார்.

பொறாமையில் செய்த வேலை

இது தொடர்பாக பாடகி சுசித்ரா கூறியதாவது, “தனுஷுக்கு நயன்தாரா கடிதம் எழுதியதை அடுத்து இன்ஸ்டாகிராமில் எனக்கு ஏகப்பட்ட மெசேஜ்கள் வந்துகொண்டே இருந்தன. ‘நீங்கள் தனுஷை பற்றி சொன்னபோது யாரும் நம்பவில்லை. இப்போது நயன்தாராவே பேசியிருக்கிறார்’ என்று கூறினார்கள்.”

“தனுஷ் ஒரு முத்திப்போன சைக்கோ. யாரடி நீ மோகினி பட சமயத்தில் நயன்தாராவை தனுஷ் பெர்சனலாக துன்புறுத்தினார். படத்தில் மட்டுமல்ல நிஜத்திலும் தனுஷும் கார்த்திக் குமாரும் நயன்தாராவுக்கு ரூட் விட்டார்கள். செட்டுக்கு வரும்போது ஒரு Formalityக்கு தனுஷை பார்த்து நயன்தாரா ஹாய் என்று சொன்னால்; அதை காதல் என்று தனுஷ் எடுத்துக்கொள்வார்.”

“நீங்கள் வேண்டுமானால் பாருங்கள் இன்னும் பத்து நாட்களில் நயன் லீக்ஸ் என்ற ஒன்று வரும். அதனை தனுஷே ஆள் வைத்து வெளியிடுவார்” என்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

ஆனால் பலர், “இவருக்கு யாரவது Free-யா டிரீட்மென்ட் பாருங்க.. நாளுக்கு நாள் முத்திக்கிட்டே போகுது..” என்று பாடகி சுசித்ராவுக்கு எதிராக கமெண்ட் செய்து வருகின்றனர்.

Trending News