வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

ஆர் ஜே பாலாஜி இல்லாத மூக்குத்தி அம்மன் 2?. நயன்தாரா பார்த்த வேலையா இருக்குமோ

Mookuthi Amman 2: சத்தமே இல்லாமல் நயன்தாராவின் புதிய அப்டேட் நேற்று வெளியாகியிருக்கிறது. அதுவும் சூப்பர் ஹிட் அடித்த மூக்குத்தி அம்மன் படத்தின் இரண்டாம் பாகம். தமிழ் சினிமாவில் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் நிறைய சாமி படங்கள் வெளியாகிறது சூப்பர் சூப்பர் ஹிட் அடித்தன.

தியேட்டருக்குள் சாமி வந்து பெண்கள் ஆடிய சம்பவம் கூட நடந்தது. ஆனால் இதெல்லாம் கிரிஞ்சாக பார்க்கப்படும் 2k கிட்ஸ்கள் காலத்தில் அம்மன் படம் எடுக்கப் போகிறேன் என ஆர் ஜே பாலாஜி அறிவிப்பு வெளியிட்டார்.

அதுவும் நயன்தாரா அம்மனாக நடிக்கும் படமா, ஏன்னா நிறைய கேலி பேச்சுக்கள் கூட வந்தது. அம்மன் படத்தில் எந்த ஒரு இயக்குனரும் பேசாத விஷயத்தை பேசி பெரிய வெற்றியைப் பெற்றார் பாலாஜி. நயன்தாராவும் நவீன காலத்து அம்மனாக மூக்குத்தி அம்மன் படத்தில் மேஜிக் செய்திருந்தார்.

ஆனால் நேற்று வெளியாகி இருக்கும் மூக்குத்தி அம்மன் 2 அறிவிப்பு ஆர் ஜே பாலாஜி பெயர் கூட இல்லை. அவர் இல்லாமலேயே மூக்குத்தி அம்மன் இரண்டாம் பாகத்தை எடுக்க இருக்கிறார்கள். இந்த படத்தை ஐசரி கணேசனின் வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

நயன்தாரா பார்த்த வேலையா இருக்குமோ

ஆர் ஜே பாலாஜியின் நட்பின் காரணமாகத்தான் நயன்தாரா மூக்குத்தி அம்மன் படத்திற்குள் வந்தது. ஆனால் தற்போது பாலாஜி இல்லாமலேயே படம் ஆகப் போகிறது. இதற்குக் காரணம் த்ரிஷா மீதான காண்டு தான். அதாவது மூக்குத்தி அம்மனை நயன்தாராவை வைத்து இயக்கிய ஆர் ஜே பாலாஜி, மாசாணி அம்மன் என்னும் படத்தை த்ரிஷாவை வைத்து இயக்குகிறார்.

ஏற்கனவே தன்னுடைய இடத்தை திரிஷா தட்டி பறித்தது நயன்தாராவுக்கு கோபம். முடிஞ்ச அளவுக்கு த்ரிஷாவுக்கு பெரிய பட வாய்ப்புகள் கிடைக்காதவாறு பார்த்துக் கொள்கிறார். அதையும் மீறி தன்னுடைய நண்பன் ஆர் ஜே பாலாஜி இப்படி ஒரு வாய்ப்பு கொடுத்திருப்பது நயன்தாராவுக்கு வயித்தெரிச்சல் தான்.

அதனால் தான் தன்னுடைய சூப்பர் ஹிட் அம்மன் படத்தின் இரண்டாம் பாகத்தோடு களம் இறங்குகிறார். இந்தப் படத்தை இயக்க பெரிய இயக்குனருடன் பேச்சு வார்த்தையும் நடைபெற்று வருகிறது. மாசாணி அம்மன் மீது கோபப்பட்டு எடுக்கப் போகும் அம்மன் 2 நயன்தாராவுக்கு கை கொடுக்குறதா, இல்லை வழக்கமான இரண்டாம் பாகக் கதைகள் போல் வழுக்கி விடுகிறதா என பொறுத்திருந்து பார்க்கலாம்.

Trending News