வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

நம்பர் ஒன் அது எனக்கு மட்டும்தான், பழைய ஃபார்முக்கு வந்த நயன்தாரா.. அடுத்தடுத்து ரிலீஸாக உள்ள 6 படங்கள்

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுக்கு இந்த ஆண்டு சொந்த வாழ்க்கையில் நல்ல விஷயங்கள் நடந்துள்ளது. அதாவது தனது காதலன் விக்னேஷ் சிவனை கரம் பிடித்து நான்கே மாதத்தில் இரண்டு ஆண் குழந்தைகளுக்கு தாயாகியுள்ளார். இந்நிலையில் வருகின்ற நவம்பர் 18ஆம் தேதி நயன்தாரா 38வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.

ஆனால் இந்த வருடம் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு பெரியளவில் அவரது படங்கள் வெற்றி பெறவில்லை. இந்நிலையில் மீண்டும் பழைய ஃபார்முக்கு இறங்கி உள்ளார் நயன்தாரா. அதாவது அவரது நடிப்பில் அடுத்தடுத்து 6 படங்கள் ரிலீஸ் ஆக உள்ளது.

Also Read : நயன்தாரா இடத்தை கைபற்றும் ஹீரோயின்.. 2 நடிகைகளையும் பின்னுக்கு தள்ளிய மூன்றாவது நாயகி!

அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் பிரித்விராஜுக்கு ஜோடியாக கோல்டு என்ற படத்தில் நயன்தாரா நடித்துள்ளார். இந்த படம் வருகின்ற டிசம்பர் மாதம் இரண்டாம் தேதி தமிழ், மலையாள ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. இதைத்தொடர்ந்த நயன்தாரா கனெக்ட் என்ற படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தின் டீசர் நயன்தாராவின் பிறந்தநாள் அன்று வெளியாக உள்ளது. இப்படத்தில் வினய், சத்யராஜ் ஆகியோர் நயன்தாராவுடன் நடித்துள்ளனர். இதைத்தொடர்ந்த அட்லீ இயக்கத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக ஜவான் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் மூலம் நயன்தாரா பாலிவுட்டில் கால் பதிக்கிறார்.

Also Read : நயன்தாரா விவகாரத்தை கையில் எடுத்த சமந்தா.. யசோதா திரைப்படத்தின் அனல் பறக்கும் ட்விட்டர் விமர்சனம்

இந்த படம் அடுத்த ஆண்டு ரிலீஸ் ஆக உள்ளது. இதைத்தொடர்ந்த அகமது இயக்கத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நயன்தாரா இறைவன் என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் நயன்தாராவின் 75 வது படமும் உருவாகி வருகிறது.

இதைத்தொடர்ந்து மலையாள படம் ஒன்றிலும் நிவின் பாலி உடன் நடித்து வருகிறார். இவ்வாறு தொடர்ந்து அடுத்தடுத்த படங்கள் நயன்தாரா நடிப்பில் வெளியாகி ரசிகர்களை குஷிபடுத்த உள்ளது. மேலும் வருகின்ற நவம்பர் 18 நயன்தாராவின் வேறு படங்களில் அப்டேட்டும் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

Also Read : நயன்தாராவுக்கு போட்டி த்ரிஷா, சமந்தா இல்லயாம்.. 15 படங்களை கையில் வைத்திருக்கும் ஒரே நடிகை, அடேங்கப்பா!

Trending News