செவ்வாய்க்கிழமை, ஜனவரி 21, 2025

வாடகை தாய் மூலம் குழந்தை.. நயன்தாரா எடுத்த விபரீதமான முடிவு

தற்போது சமூக வலைத்தளங்களில் பிரபலமாக பேசிக்கொண்டிருப்பது நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமணம் பற்றி தான். சில காலங்களாகவே இவர்கள் இருவரும் கோவில், தர்கா, சர்ச் போன்ற இடங்களுக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

அப்படி அவர்கள் போகும் இடங்களில் எடுத்த போட்டோக்கள் அனைத்தும் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வந்தது. இந்த சமயத்தில் தான் விக்னேஷ் சிவன், நயன்தாரா இருவரும் ஒரு கோவிலுக்கு சென்று விட்டு வரும் போது எடுத்த வீடியோ வெளியாகி பரபரப்பை கிளப்பியது.

ஏனென்றால் நயன்தாரா அதில் நெற்றி வகிட்டில் குங்குமம் வைத்து இருந்தார். அதை பார்த்த ரசிகர்கள் அனைவரும் இந்த ஜோடிக்கு திருமணம் முடிந்து விட்டதா என்று ஆச்சர்யமாக கேட்டனர். ஆனால் இது பற்றி சம்பந்தப்பட்ட இருவரும் எந்த ஒரு விளக்க அறிவிப்பும் இதுவரை கொடுக்கவில்லை.

இந்நிலையில் நயன்தாரா திருமணத்துக்கு பிறகும் படங்களில் தொடர்ந்து நடிக்கும் முடிவில் இருக்கிறார். இப்போது கூட அவரின் கைவசம் நிறைய படங்கள் இருக்கிறது. அதனால் அவர் முடிந்தவரை சினிமாவில் நடித்து சம்பாதித்து விட நினைக்கிறார்.

அதனால்தான் அவர் இவ்வளவு காலம் திருமணம் செய்து கொள்ளாமல் தள்ளிப் போட்டுக்கொண்டே இருந்தார். இப்போது இவருக்கு திருமணம் முடிந்து விட்டதா, இல்லையா என்ற குழப்பம் அனைவருக்கும் இருக்கிறது. தற்போது மேலும் ஒரு அதிர்ச்சிகரமான தகவல் நயன்தாராவை பற்றி வெளியாகி இருக்கிறது.

அது என்னவென்றால் நயன்தாரா கூடிய விரைவில் வாடகை தாய் மூலமாக ஒரு குழந்தை பெற்றுக்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே அவருக்கு முப்பத்தி ஏழு வயசு ஆயிடுச்சு. இனிமேல் குழந்தை பெற்றுக் கொள்வதில் சில சிரமங்களும் இருக்கிறது.

அதனால்தான் அவர் வேறு வழியில்லாமல் இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது. திருமணத்திற்குப் பிறகு குழந்தைக்காக ஒரு வருடம் நடிப்பதை விட வேண்டும் அல்லது குழந்தை பெற்றுக் கொள்ளாமல் இருக்க வேண்டும். இதிலிருந்து தப்பிக்க அவர் இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளார் என்று சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி காட்டுத்தீ போல பரவி வருகிறது. இதேபோன்று பிரியங்கா சோப்ராவும் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

Trending News