திங்கட்கிழமை, டிசம்பர் 16, 2024

பிளேபாய் நடிகருக்கு கரிசனம் காட்டும் நயன்தாரா.. கடுப்பில் தவிக்கும் விக்கி

Nayanthara: தமிழ் சினிமாவில் எல்லா ஹீரோயின்களையும் விட ஒரு படி மேலே டாப்பில் இருக்கிறது நயன்தாரா. அப்படிப்பட்ட இவர் திருமணத்திற்கு பிறகு கணவர் குழந்தைகளோடு இருப்பது மட்டுமில்லாமல் நடிப்பையும் கைவிடாமல் தொடர்ந்து பட வாய்ப்புகளை தக்க வைத்துக் கொண்டு வருகிறார். இன்னும் சொல்ல போனால் கல்யாணத்திற்கு பிறகு ரொம்பவே பிஸியாகிவிட்டார்.

அத்துடன் பிசினஸிலும் முழு கவனத்தை செலுத்தி பல வகைகளில் லாபத்தை சம்பாதித்து வருகிறார். இப்படி இவருடைய ட்ராக் ஏறுமுகமாகவே போய்க்கொண்டிருக்கிறது. இதற்கு எதிர் மாறாக இவருடைய கணவர் விக்னேஷ் சிவனுக்கு கேரியர் சறுக்கிக் கொண்டே இருக்கிறது. ஆனால் இதைப் பற்றி எல்லாம் கவலைப்படாத நயன் தற்போது பிளேபாயாக இருக்கும் நடிகருக்கு சப்போர்ட் செய்து வருகிறார்.

அதுவும் எப்படி என்றால் பார்க்கிற இயக்குனரிடம் அவருக்காக வாய்ப்பு கேட்டு அலைகிறார். அந்த நடிகர் வேறு யாருமில்லை ஜெய். இவருக்கு உதவி பண்ணுவதில் தான் தற்போது முழு வேலையாக நயன் பார்த்து வருகிறார். அதற்கு காரணம் ஜெய் சினிமாவில் பீல்ட் அவுட் ஆயிடக்கூடாது என்பதற்காக. அது மட்டும் இல்லாமல் ஜெய் அடிக்கடி மது அருந்தக் கூடியவர். அப்படிப்பட்ட இவரை முழுமையாக மாற்றியவர் நயன்தாரா தான்.

Also read: பிரபுதேவாவிடம் கெஞ்சிய நயன்தாரா.. 12 வருடத்திற்கு பிறகு வெளிவந்த உண்மை

இதனை தொடர்ந்து ஜெய் படங்களில் பிசியாக நடிக்க ஆரம்பித்து விட்டால் முழுமையாக குடிப்பழக்கத்தை மறந்து விடுவார். அதனால் அடுத்தடுத்து பட வாய்ப்பை நயன்தாரா தேடி கொடுக்கிறார். அந்த வகையில் நயன்தாரா நடிக்கும் 75 ஆவது படத்தில் ஹீரோவாக ஜெய்க்கு வாய்ப்பு கொடுத்து இருக்கிறார்.

அடுத்ததாக நயன் நடித்த அறம் படத்தின் இயக்குனரிடம் பேசி ஜெயிக்கு கருப்பர் நகரம் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை வாங்கி கொடுத்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் இயக்குனர் அட்லீயிடமும் பேசி அவர் இயக்கப் போகும் அடுத்த படத்தில் ஜெய்க்கு முக்கிய கதாபாத்திரத்தை வாங்கி கொடுத்திருக்கிறார்.

இப்படி தொடர்ந்து ஜெயுடைய கேரியரில் மட்டுமே அதிக கவனத்தை செலுத்தி கரிசனம் காட்டி வருகிறார். இந்த ஒரு விஷயம் விக்னேஷ் சிவனுக்கு பிடிக்கவில்லை. அதுவும் பெண்கள் விஷயத்தில் பிளேபாயாக நடந்து கொள்ளும் ஜெய்க்கு நயன்தாரா இந்த மாதிரி உதவிகளை பண்ணுவது விக்கிக்கு கடுப்பாகிறது. இந்த ஒரு விஷயம் தான் தற்போது நயனுக்கும் விக்கிக்கும் இடையில் ஒரு பிரச்சனையாக ஆரம்பித்திருக்கிறது.

Also read: ஒரே கல்லுல ரெண்டு மாங்காய்.. அம்மாடியோ! கமலுக்கு ஜோடியாக நயன்தாரா கேட்ட 3 மடங்கு சம்பளம்

- Advertisement -

Trending News