நயன்தாரா ஆசைக்கு அளவில்லாமல் போய்க்கொண்டிருக்கிறது. தமிழில் ஒரு படத்தில் நடிக்க 10 கோடிகள் வரை சம்பளம் வாங்குகிறார். லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தையும் தன்வசம் வைத்துள்ளார். இவர் தான் தமிழ் சினிமா வட்டாரத்தில் அதிக சம்பளம் பெரும் ஹீரோயின்.
இப்பொழுது இவர் ஒரு படத்தில் நடிக்க 20 கோடிகள் வரை சம்பளம் கேட்டுள்ளார். ஹீரோயின் அந்தஸ்தை விட்டுவிட்டு வேறு ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஏற்கனவே பாலிவுட் நடிகை கரீனா கபூர் அந்த கேரக்டரில் நடிக்கதாக இருந்து பின் விலகி விட்டார்.
கரீனா கபூர் கல்தா கொடுத்து கிளம்பியb கதாபாத்திரம்
கே ஜி எஃப் ஹீரோ யாஷ் நடித்துக் கொண்டிருக்கும் படம் “டாக்ஸிக்”. இந்த படம் பெரும் எதிர்பார்ப்புகளுடன் தயாராகிக் கொண்டிருக்கிறது . இந்த படத்தில் நடிக்க கரீனா கபூர் 10 கோடிகள் வரை சம்பளம் கேட்டுள்ளார். படத்தில் தனக்கு முக்கியத்துவம் இல்லை என இப்பொழுது அந்த படத்தில் இருந்து விலகி விட்டார்.
“டாக்ஸிக்” படத்தில் ஹீரோவுக்கு ஒரு முக்கியமான அக்கா கதாபாத்திரம் இருக்கிறதாம் அந்த கதாபாத்திரத்தில் தான் கரீனா கபூர் ஒப்பந்தமாகி இருந்தார். மிகவும் சென்டிமென்ட் கலந்த எமோஷனல் காட்சிகள் நிறைய இருக்கிறதாம். அதற்காகத்தான் கரீனா கபூர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இப்போது கரீனா கபூர் விலகியதால் அந்த கதாபாத்திரத்திற்கு நயன்தாராவை ஒப்பந்தம் செய்துள்ளனர். ஆனால் நயன்தாரா அக்கா கதாபாத்திரம் நடிக்க தனக்கு 20 கோடிகள் வேண்டும், என்று மொத்த பட குழுவையும் அலற விட்டிருக்கிறார். மேலும் கரீனா கபூர், ரிஜெக்ட் செய்த கதாபாத்திரம் நான் நடிப்பதே பெரிது எனவும் கூறி வருகிறார்.